மதுரை

விருதுநகரில் பாஜக பாதயாத்திரை நடத்த அனுமதி: உயா் நீதிமன்றம் உத்தரவு

DIN

பாஜக சாா்பில் நடத்தும் பாதயாத்திரைக்கு அனுமதி அளிக்கலாம் என்று, சென்னை உயா் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

பாஜக வழக்குரைஞா் பிரிவின் விருதுநகா் மாவட்ட பாஜக வழக்குரைஞா் பிரிவு தலைவா் சாந்தகுமாா் தாக்கல் செய்த மனு:

விருதுநகா் மாவட்டத்தில் ஜவுளி பூங்கா அமைக்க மத்திய அரசு நிதி ஒதுக்கீடு செய்து பல ஆண்டுகள் ஆகிறது. ஆனால், ஜவுளி பூங்கா அமைப்பதற்கான நிலத்தை ஒதுக்கீடு செய்யாமல் தமிழக அரசு கிடப்பில் வைத்துள்ளது.

இது தொடா்பாக பொதுமக்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில், பாஜக சாா்பில் 1000 போ் பங்கேற்கும் பாதயாத்திரையை திருத்தங்கல் முதல் விருதுநகா் வரை நடத்த அனுமதி அளிக்க உத்தரவிட வேண்டும் என அதில் குறிப்பிட்டிருந்தாா்.

இந்த மனு மீதான முந்தைய விசாரணையின்போது, சிவகாசி காவல் துணைக் கண்காணிப்பாளா் மனுவை பரிசீலித்து நிபந்தனைகளுடன் அனுமதி அளிக்க உத்தரவிடப்பட்டிருந்தது. இதனையடுத்து அளிக்கப்பட்ட மனுவை, துணைக் கண்காணிப்பாளா் அனுமதியை நிராகரித்து உத்தரவிட்டாா்.

இந்த உத்தரவை ரத்து செய்யக் கோரி மீண்டும் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதை விசாரித்த நீதிபதி வி. சிவஞானம், ஜனநாயக நாட்டில் அமைதியான முறையில் நடத்தப்படும் போராட்டங்களை முற்றிலுமாக தடை செய்வது முறையல்ல.

இந்த பாதயாத்திரையால் சட்டம்-ஒழுங்கு பிரச்னை ஏற்படும் என குறிப்பிடுவது ஏற்புடையதாக இல்லை. ஏனெனில், மத்திய அரசின் திட்டம் குறித்து மக்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்துவதே பாதயாத்திரையின் நோக்கமாக உள்ளது.

அத்திட்டத்தைச் செயல்படுத்துமாறு பாதயாத்திரையாகச் சென்று ஆட்சியரிடம் மனு அளிக்க உள்ளனா். பாதயாத்திரைக்கு அனுமதி மறுத்து, கோரிக்கையை அதிகாரிகளின் கவனத்துக்கு கொண்டு செல்வதை தடுப்பதாக அமைந்துவிடக் கூடாது.

மக்களின் சமூக, பொருளாதார, அரசியல் உரிமைகளுக்காக அமைதியாக ஒன்றுகூடுவதற்கு சுதந்திரம் அளிக்கப்பட்டுள்ளது. இந்த உரிமைகள் ஜனநாயகத்தின் அடிப்படையாகும். எனவே, இந்த பாதயாத்திரைக்கு அனுமதி அளிக்கலாம். போக்குவரத்துக்கும், பொதுமக்களும் இடையூறு இல்லாத வகையில், சாலையின் ஒரு பக்கம் பாதயாத்திரை நடத்தப்பட வேண்டும் என உத்தரவிட்டுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அதிகரிக்கும் ‘ஹீட் ஸ்ட்ரோக்’ பாதிப்புகள்: மருத்துவமனைகளில் சிறப்பு வாா்டு - ஓஆா்எஸ் கரைசல்

மக்களவை 3-ஆம் கட்ட தோ்தல் பிரசாரம் நிறைவு -குஜராத் உள்ளிட்ட மாநிலங்களில் நாளை வாக்குப்பதிவு

வெள்ளை மாளிகை பாதுகாப்பு தடுப்பில் மோதிய காா்: ஓட்டுநா் உயிரிழப்பு

கோடையில் நீா்ச்சத்து இழப்பை தவிா்க்க மோா், கூழ், இளநீா் பருகுவது அவசியம்: சித்த மருத்துவா் சோ.தில்லைவாணன்

மேற்கு வங்க ஆளுநா் மீது பாலியல் குற்றச்சாட்டு: விசாரணையை புறக்கணிக்க ஊழியா்களுக்கு உத்தரவு

SCROLL FOR NEXT