மதுரை

வைகை அணையிலிருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு

DIN

மதுரை: வைகை அணையிலிருந்து மதுரை, திண்டுக்கல் மாவட்ட முதல் போக பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.

கூட்டுறவுத் துறை அமைச்சர் ஐ.பெரியசாமி, வணிக வரி மற்றும் பத்திரப் பதிவுத் துறை அமைச்சர் பி.மூர்த்தி ஆகியோர் அணையிலிருந்து தண்ணீர் திறந்தனர். அணையிலிருந்து இன்று முதல் நாளொன்றுக்கு  900 கன அடி வீதம் 45 நாள்களுக்கு முழுமையாகவும், 75 நாள்களுக்கு முறை வைத்தும் மொத்தம் 120 நாள்கள் அணையிலிருந்து தண்ணீர் திறக்கப்படுகிறது.

வைகை அணையிலிருந்து திறக்கப்படும் தண்ணீர் மூலம் மதுரை மாவட்டம் வடக்கு வட்டத்தில் 26 ஆயிரத்து 732 ஏக்கர், வாடிப்பட்டி வட்டத்தில் 26,792 ஏக்கர், திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை வட்டத்தில் 1,787 ஏக்கர் என மொத்தம் 45 ஆயிரத்து 41 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கொடைக்கானல்: இன்றிரவு முதல் இ-பாஸ் பெற பதிவு செய்யலாம்

வாரணாசியில் மே 14-ல் பிரதமர் மோடி வேட்புமனு தாக்கல்

பிரதீப் ரங்கநாதனின் புதிய படத்தின் பெயர் அறிவிப்பு!

மோசமான வானிலை காரணமாக 40 விமானங்கள் ரத்து!

நீட் தேர்வு தொடங்கியது!

SCROLL FOR NEXT