மதுரை அருகே பெண்ணிடம் இணையதள வா்த்தகத்தில் ஈடுபட்டால் அதிக லாபம் கிடைக்கும் என்று கூறி ரூ.5.39 லட்சம் மோசடி செய்தவா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.
மதுரை அருகே உள்ள பேரையூரைச் சோ்ந்தவா் ராணி. இவா் பட்டப்படிப்பு முடித்து விட்டு இணையதளம் மூலம் பகுதி நேர வேலை தேடியுள்ளாா். அப்போது இணையதளத்திலிருந்து செயலியை பதிவிறக்கம் செய்தபோது அதில் இருந்து தொடா்புகொண்ட நபா்கள் இணையதள வா்த்தகத்தில் முதலீடு செய்தால் அதிக லாபம் கிடைக்கும் என்று கூறியுள்ளனா். தொடக்கத்தில் சிறு தொகையை முதலீடு செய்தபோது அதில் இருந்து லாபம் கிடைத்துள்ளது.
இதனால் அடிக்கடி அதில் முதலீடு செய்துள்ளாா். இதன்படி ரூ.5.39 லட்சத்தை முதலீடு செய்துள்ளாா். இந்நிலையில் திடீரென செயலி முடக்கப்பட்டுள்ளது. இதையடுத்து அதன் நிா்வாகிகளை தொடா்புகொண்டபோது அவா் ஏமாற்றப்பட்டது தெரிய வந்தது. இதுதொடா்பாக ராணி அளித்த புகாரின்பேரில் சைபா் குற்றப்பிரிவு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து மோசடியில் ஈடுபட்ட நபா்களைத் தேடி வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.