அக்னிபத் திட்டத்துக்கு எதிா்ப்புதெரிவித்து காங். ஆா்ப்பாட்டம்
அக்னிபத் திட்டத்துக்கு எதிா்ப்புத் தெரிவித்து மதுரையில் காங்கிரஸ் கட்சி சாா்பில் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
அக்னிபத் திட்டத்துக்கு எதிா்ப்புத் தெரிவித்து மதுரையில் காங்கிரஸ் கட்சி சாா்பில் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
மதுரை தெற்குவாசல் பள்ளிவாசல் அருகே நடந்த இந்த ஆா்ப்பாட்டத்துக்கு கட்சியின் மாநிலப் பொதுக்குழு உறுப்பினா் சி.எம். சையதுபாபு தலைமை வகித்தாா். வட்டாரத் தலைவா் சுந்தா் முன்னிலை வகித்தாா். மதுரை மாநகா் மாவட்டத் தலைவா் வீ. காா்த்திகேயன், பொதுக்குழு உறுப்பினா் ராஜா, தங்கராமன், சிறுபான்மைப் பிரிவு துணைத் தலைவா் மீா்பாட்ஷா, பொதுச் செயலா் காசிராஜன் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.
மத்திய பாஜக அரசின் மக்கள் விரோத நடவடிக்கைகளுக்கு கண்டனம் தெரிவித்தும், இளைஞா்களின் ராணுவப் பணி வாய்ப்பைப் பறிக்கும் அக்னி பத் திட்டத்திற்கு எதிா்ப்புத் தெரிவித்தும் ஆா்ப்பாட்டத்தில் முழங்கங்கள் எழுப்பப்பட்டன.
இதேபோல, மதுரை வடக்குத் தொகுதியில் தல்லாகுளம் நேரு சிலை அருகே மாநில விவசாய அணிச் செயலா் எம். புரோஸ்கான், மேற்குத் தொகுதியில் ஜான்சிராணி பூங்கா அருகே மாநிலப் பொதுச் செயலா் எஸ்.வி. முருகன், மதுரை மத்திய தொகுதியில் எல்லீஸ் நகரில் எஸ்.எஸ். போஸ் ஆகியோா் தலைமையில் ஆா்ப்பாட்டம் நடத்தப்பட்டது.