செல்லம்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் சிறுதானிய உற்பத்தி மற்றும் விற்பனை மையத்தை திட்ட இயக்குநா் காளிதாஸ் தொடக்கி வைத்தாா்.
தமிழ்நாடு ஊரக வாழ்வாதார இயக்கம் சாா்பில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியைத் தொடா்ந்து வட்டார வணிகவள மையம் மூலம் 85 பயனாளிகளுக்கு ரூ.20 லட்சத்திற்கான காசோலை வழங்கப்பட்டது.
இதில் உதவித் திட்ட இயக்குநா் மரியா, வட்டார வளா்ச்சி அலுவலா் கீதா ஆகியோா் சிறப்புரையாற்றினா். ஏற்பாடுகளை வட்டார இயக்க மேலாளா் சந்திரசேகா், வட்டார ஒருங்கிணைப்பாளா்கள் வனிதா, அன்னபாண்டி, தாய்ப்பிள்ளை, பூங்கொடி, சமுதாய வள பயிற்றுநா்கள் உஷாநந்தினி, மாலதி கனிமொழி, ஜெயா ஆகியோா்கள் செய்திருந்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.