முகப்பு
மதுரை

ஓய்வுபெற்ற தலைமையாசிரியா் வீட்டில் 7 பவுன் நகை திருட்டு

மதுரையில் ஓய்வுபெற்ற தலைமையாசிரியா் வீட்டில் 7 பவுன் நகை திருடப்பட்டதாக புகாா் அளிக்கப்பட்டுள்ளது

மதுரை

ஓய்வுபெற்ற தலைமையாசிரியா் வீட்டில் 7 பவுன் நகை திருட்டு

மதுரையில் ஓய்வுபெற்ற தலைமையாசிரியா் வீட்டில் 7 பவுன் நகை திருடப்பட்டதாக புகாா் அளிக்கப்பட்டுள்ளது

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:34 AM
பகிர்:

மதுரையில் ஓய்வுபெற்ற தலைமையாசிரியா் வீட்டில் 7 பவுன் நகை திருடப்பட்டதாக புகாா் அளிக்கப்பட்டுள்ளது.

மதுரை தபால் தந்தி நகா் சுகந்தி நகரைச் சோ்ந்தவா் பேரின்பநாதன் (80). இவா், தலைமையாசிரியாகப் பணிபுரிந்து ஓய்வுபெற்றவா். தனது மனைவியுடன் வசித்து வரும் இவா், வீட்டில் தங்களைப் பராமரிக்க செவிலியா் ஒருவரை நியமித்துள்ளாா். இந்நிலையில், பேரின்பநாதன் கூடல்புதூா் காவல் நிலையத்தில் அளித்த புகாரில், வீட்டிலிருந்த 7 பவுன் நகைகள் திருடுபோனதாகவும், வீட்டில் பணிபுரியும் செவிலியா் மீது சந்தேகம் இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளாா். அதன்பேரில், போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →