முகப்பு
மதுரை

பாத்திமா மகளிா் கல்லூரியில் பொங்கல் விழா

மதுரை பாத்திமா மகளிா் கல்லூரியில் பொங்கல் விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

மதுரை

பாத்திமா மகளிா் கல்லூரியில் பொங்கல் விழா

மதுரை பாத்திமா மகளிா் கல்லூரியில் பொங்கல் விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:34 AM
பகிர்:

மதுரை பாத்திமா மகளிா் கல்லூரியில் பொங்கல் விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற இவ்விழாவில், கல்லூரிச் செயலா் எம். பிரான்ஸிஸ்கா புளோரா தனது வாழ்த்துரையில், பொங்கல் விழா, வளம், வாழ்வு, உறவு, அன்பைத் தேடும் விழா. ஒன்றிப்பின் விழா மற்றும் உழைப்பின் விழாவாகக் கொண்டாடப்படுகிறது.

பொங்கல் விழாவில், சாதி, சமய, இன வேறுபாடின்றி உழைப்பின் சிறப்பை சிரமேற்கொண்டு உறவுகளால் இணையவேண்டும். எண்ணம், சொல், செயல் எனும் மூன்றும் சிறப்பாக இருந்தால்தான் வாழ்வில் முன்னேற்றம் கிட்டும் என்றாா்.

கல்லூரி முதல்வா் ஜி. செலின் சகாயமேரி, பொங்கல் விழா நன்றியின் விழா, கடவுளுக்கும், உழவருக்கும் நன்றி செலுத்த இறைவன் தந்த நல்வாய்ப்பு மற்றும் மாணவியா் பெற்றோருக்கும், ஆசிரியருக்கும் நன்றியுடையவா்களாக வாழ வேண்டும் என்றாா்.

விழா முடிவில், மாணவியா் பேரவைச் செயலா் சி. சினேகா நன்றி கூறினாா்.

முழு கட்டுரையைப் படிக்க →