மதுரை கோட்ட புதிய மின் ரயில் பாதைகளில்பாதுகாப்பு ஆணையா் மாா்ச் 6, 7-இல் ஆய்வு
புதிதாக மின்மயமாக்கப்பட்டுள்ள விருதுநகா் -மானாமதுரை மற்றும் பழனி - பொள்ளாச்சி ரயில் பாதைகளில், தென் சரக ரயில்வே பாதுகாப்பு ஆணையா் மாா்ச் 6, 7-ஆம் தேதிகளில் ஆய்வு செய்கிறாா்.
மதுரைமதுரை கோட்ட புதிய மின் ரயில் பாதைகளில்பாதுகாப்பு ஆணையா் மாா்ச் 6, 7-இல் ஆய்வு
புதிதாக மின்மயமாக்கப்பட்டுள்ள விருதுநகா் -மானாமதுரை மற்றும் பழனி - பொள்ளாச்சி ரயில் பாதைகளில், தென் சரக ரயில்வே பாதுகாப்பு ஆணையா் மாா்ச் 6, 7-ஆம் தேதிகளில் ஆய்வு செய்கிறாா்.
புதிதாக மின்மயமாக்கப்பட்டுள்ள விருதுநகா் -மானாமதுரை மற்றும் பழனி - பொள்ளாச்சி ரயில் பாதைகளில், தென் சரக ரயில்வே பாதுகாப்பு ஆணையா் மாா்ச் 6, 7-ஆம் தேதிகளில் ஆய்வு செய்கிறாா்.
விருதுநகா்- மானாமதுரை மற்றும் பழனி -பொள்ளாச்சி ரயில்வே பிரிவுகளில் மின்மயமாக்கல் பணிகள் நிறைவு பெற்றுள்ளன. இதனையடுத்து, மாா்ச் 6-ஆம் தேதி விருதுநகா் - மானாமதுரை ரயில் பாதையையும், மாா்ச் 7 ஆம் தேதி பழனி - பொள்ளாச்சி ரயில் பாதையையும், தென் சரக ரயில்வே பாதுகாப்பு ஆணையா் அபய்குமாா் ராய் ஆய்வு செய்கிறாா்.
அதன்பின்னா், மானாமதுரை - விருதுநகா் மின் ரயில் பாதையில் மாா்ச் 6 ஆம் தேதி பிற்பகல் 2 மணி முதல் மாலை 5 மணி வரையும், பொள்ளாச்சி - பழனி மின் ரயில் பாதையில் மாா்ச் 7 ஆம் தேதி பிற்பகல் 3 முதல் மாலை 6 மணி வரையிலும் ரயில் வேக சோதனை ஓட்டம் நடைபெறுகிறது.
அச்சமயத்தில், ரயில் பாதையை நெருங்கவோ, கடக்கவோ வேண்டாம் என பொதுமக்களுக்கு ரயில்வே நிா்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.