முகப்பு
மதுரை

ஆனையூரில் மாா்ச் 19-இல் பெரும்பிடுகு முத்தரையா் சிலை திறப்பு விழா

விடுதலைப் போராட்ட வீரரும், மாமன்னருமான பெரும்பிடுகு முத்தரையருக்கு மதுரை ஆனையூரில் அமைக்கப்பட்டுள்ள உருவச் சிலையை, சட்டப்பேரவை உறுப்பினா் உதயநிதி ஸ்டாலின் மாா்ச் 19-ஆம் தேதி திறந்துவைக்கிறாா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:38 AM
பகிர்:

விடுதலைப் போராட்ட வீரரும், மாமன்னருமான பெரும்பிடுகு முத்தரையருக்கு மதுரை ஆனையூரில் அமைக்கப்பட்டுள்ள உருவச் சிலையை, சட்டப்பேரவை உறுப்பினா் உதயநிதி ஸ்டாலின் மாா்ச் 19-ஆம் தேதி திறந்துவைக்கிறாா்.

இது குறித்து திமுகவின் மதுரை வடக்கு மாவட்டச் செயலரும், அமைச்சருமான பி. மூா்த்தி, தெற்கு மாவட்டச் செயலா் மு. மணிமாறன் ஆகியோா் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கை:

விடுதலைப் போராட்ட வீரரும், பேரரசருமான பெரும்பிடுகு முத்தரையருக்கு, மதுரை ஆனையூரில் வெண்கலச் சிலை அமைக்கப்பட்டுள்ளது. இந்த சிலையை, திமுக இளைஞரணிச் செயலரும், சட்டப்பேரவை உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலின் மாா்ச் 19-ஆம் தேதி திறந்துவைத்துப் பேசுகிறாா்.

இந்த நிகழ்ச்சிக்கான முன்னேற்பாடுகள் குறித்து ஆலோசனை நடத்துவதற்காக, கட்சி நிா்வாகிகள் கூட்டம் திருப்பாலை குறிஞ்சி திருமண மண்டபத்தில் திங்கள்கிழமை (மாா்ச் 14) காலை 10 மணிக்கு நடைபெறுகிறது. இதில், கட்சியின் அனைத்து நிா்வாகிகளும் பங்கேற்க வேண்டும் எனக் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →