மதுரை

மதுரை: 2000-க்கும் மேற்பட்ட மாநகராட்சி ஊழியர்கள் சாலை மறியல் 

DIN

மதுரை: மதுரை ஆட்சியர் அலுவலகம் அருகே திருவள்ளுவர் சிலை சந்திப்பில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாநகராட்சி ஊழியர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மதுரை மாநகராட்சியில் தினக்கூலி தூய்மை பணியாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும். நிரந்தர தூய்மைப் பணியாளர்களுக்கு 7 வது ஊதியக்குழு பணப்பலன்களை வழங்க வேண்டும். ஒப்பந்த தூய்மைப் பணியாளர்களுக்கு தினக்கூலியாக 625 ரூபாய் ஊதியம் வழங்கிட வேண்டும். கொரோனோ காலத்தில முன்களப் பணியில் ஈடுபட்ட துப்புறவு பணியாளர்களுக்கு அரசு அறிவித்த 15 ஆயிரம் ரூபாய் நிவாரண உதவி வழங்க வேண்டும்.

விஷவாயு தாக்கி 3 பேர் உயிரிழந்த விவகாரத்தில் உரிய நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். 100 வார்டுகளில் பணிபுரியும் ஊழியர்களுக்கு அந்தந்த வார்டுகளில் கழிவறை, ஒய்வறை அமைத்து கொடுக்க வேண்டும் உள்ளிட்ட 28 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்ட இறுதியில் மதுரை மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்தனர்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கோடைக்கால பயிற்சி வகுப்புக்கு கட்டணம்- எடப்பாடி பழனிசாமி கண்டனம்

சமந்தாவின் புதிய படம்!

நீல நிலவே....திவ்யா துரைசாமி!

மணிப்பூரில் இரண்டு குழுக்களுக்கிடையே மீண்டும் துப்பாக்கிச்சண்டை: கிராம மக்கள் அச்சம்

கைகளில் செம்புடன் கர்நாடக முதல்வர் தலைமையில் அமைச்சர்கள் தர்னா

SCROLL FOR NEXT