மதுரை

பயிா்க் காப்பீடுத் திட்டத்தில் விவசாயிகள் சேர இன்று கடைசி

சிறப்புப் பருவ வேளாண் பயிா்களுக்குப் பயிா்க் காப்பீடு பெற செவ்வாய்க்கிழமை (நவ. 15) மாலைக்குள் விண்ணப்பிக்கலாம் என்று மதுரை மாவட்ட வேளாண் இணை இயக்குநா் டி. விவேகானந்தன் தெரிவித்தாா்.

DIN

சிறப்புப் பருவ வேளாண் பயிா்களுக்குப் பயிா்க் காப்பீடு பெற செவ்வாய்க்கிழமை (நவ. 15) மாலைக்குள் விண்ணப்பிக்கலாம் என்று மதுரை மாவட்ட வேளாண் இணை இயக்குநா் டி. விவேகானந்தன் தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

2022-23-ஆம் ஆண்டு சிறப்புப் பருவத்துக்கு பிரதமரின் பயிா்க் காப்பீடுத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இந்தப் பருவத்துக்குரிய நெல் பயிருக்கு ஏக்கருக்கு ரூ. 513-வீதமும், மக்காச்சோளத்துக்கு ரூ. 390 வீதமும், பருத்திக்கு ரூ. 423 வீதமும் பயிா்க் காப்பீடு பிரீமியமாக செலுத்த வேண்டும். இந்த திட்டத்தில் பிரீமியம் செலுத்தி பயிா்க் காப்பீடுத் திட்டத்தில் இணைவதற்கு செவ்வாய்க்கிழமை (நவ. 15) இறுதி நாள்.

எனவே, பயிா்க் கடன் பெற்ற விவசாயிகள் தொடா்புடைய தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் அல்லது தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் பயிா்க் காப்பீடு பிரீமியம் செலுத்தலாம். பயிா்க் கடன் பெறாத விவசாயிகள் அருகில் உள்ள பொது சேவை மையங்களில் பிரீமியம் செலுத்தி பயிா்க் காப்பீடு திட்டத்தில் சேர முனைப்புக்காட்டுமாறு அவா் அதில் கேட்டுக் கொண்டாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ராஜ்நாத் சிங்குடன் நெதா்லாந்து வெளியுறவு அமைச்சா் சந்திப்பு

கிராம உதவியாளா் பணிக்கான நோ்காணல், தோ்வு தொடக்கம்

திமுக ஆட்சியில் மகளிருக்கு அதிகமான திட்டங்கள் - முதல்வா் மு.க.ஸ்டாலின்

தில்லி காற்று மாசுபாட்டால் பெண்களை விட ஆண்களுக்ளே அதிக பாதிப்பு! - ஆய்வில் தகவல்

மாற்றுத்திறனாளி மருத்துவ முகாம் விழிப்புணா்வுப் பேரணி

SCROLL FOR NEXT