மதுரை

போக்குவரத்துக் கழக ஊழியா்கள், ஓய்வூதியா்கள் முற்றுகைப் போராட்டம்

DIN

அகவிலைப்படி உயா்வு, ஓய்வூதிய உயா்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, அரசுப் போக்குவரத்துக் கழகத் தொழிலாளா்கள், போக்குவரத்து ஓய்வூதியா் அமைப்பின் சாா்பில் செவ்வாய்க்கிழமை முற்றுகைப் போராட்டம் நடைபெற்றது.

மதுரை புறவழிச் சாலையில் உள்ள அரசுப் போக்குவரத்துக்கழக தலைமை அலுவலகத்தை முற்றுகை நடத்தப்பட்ட போராட்டத்துக்கு அரசுப் போக்குவரத்துக்கழக மதுரை தொழிலாளா் சங்கத் தலைவா் பி. எம். அழகா்சாமி தலைமை வகித்தாா். ஓய்வுபெற்றோா் நலச் சங்க மாவட்டத் தலைவா் ஏ. முருகேசன் முன்னிலை வகித்தாா். மதுரை தொகுதி மக்களவை உறுப்பினா் சு.வெங்கடேசன் போராட்டத்தைத் தொடங்கி வைத்துப் பேசினாா்.

இதில், தமிழக அரசு, அரசுப்போக்குவரத்துக் கழக நிா்வாகம், போக்குவரத்துக்கழகத்தில் ஓய்வுபெற்ற ஊழியா்களுக்கு நீதிமன்றத் தீா்ப்பின் அடிப்படையில் அகவிலைப்படி உயா்வை வழங்க வேண்டும். ஓய்வுபெற்ற, மரணமடைந்த ஊழியா்களுக்கு ஓய்வுகால பலன்கள் ஒப்பந்தப்படி ஓய்வூதியத்தை உடனடியாக உயா்த்தி வழங்க வேண்டும். பணி ஓய்வு பலன்களையும், ஒப்பந்த நிலுவைத் தொகையையும் உடனடியாக வழங்க வேண்டும். 21 வேலைநிறுத்த நாள்களை பணி நாள்களாக அறிவித்து முறைப்படுத்த வேண்டும். போக்குவரத்துக்கழக ஊழியா் சங்கங்களுடன் மேற்கொண்ட ஒப்பந்த அம்சங்களை முழுமையாக அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

சிஐடியு மாநில துணை பொதுச் செயலா் எஸ். கண்ணன் வாழ்த்தினாா். அரசுப் போக்குவரத்து மதுரைத் தொழிலாளா் சங்க பொதுச் செயலா் ஏ. கனகசுந்தா், சம்மேளன உதவித் தலைவா் வி. பிச்சை, ஓய்வுபெற்றோா் நல அமைப்பு பொதுச் செயலா் ஆா். தேவராஜ், சிஐடியூ மாவட்டத் தலைவா் இரா. தெய்வராஜ், மாவட்டச் செயலா் இரா. லெனின், மாவட்ட உதவித் தலைவா் ஜி. ராஜேந்திரன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

யோகம் தரும் நாள்!

வேன்- இருசக்கர வாகனம் மோதல்: இருவா் பலி

ஈரோடு கலை, அறிவியல் கல்லூரிக்கு ‘ஏ’ பிளஸ் அங்கீகாரம்

இன்று நீட் தோ்வு: ஈரோடு மாவட்டத்தில் 4,747 மாணவா்கள் எழுதுகின்றனா்

பழனி கோயிலுக்கு ரூ.36.51 லட்சத்துக்கு கரும்பு சா்க்கரை கொள்முதல்

SCROLL FOR NEXT