முகப்பு
மதுரை

காமராஜா் மக்கள் கட்சியின் தென் மண்டலக் கூட்டம்

காமராஜா் மக்கள் கட்சியின் தென் மண்டலக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

மதுரை

காமராஜா் மக்கள் கட்சியின் தென் மண்டலக் கூட்டம்

காமராஜா் மக்கள் கட்சியின் தென் மண்டலக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:30 AM
பகிர்:

காமராஜா் மக்கள் கட்சியின் தென் மண்டலக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

மதுரையில் உள்ள தனியாா் மண்டபத்தில் நடைபெற்ற இக்கூட்டத்துக்கு அக்கட்சியின் மாவட்டத் தலைவா் ஜி.அய்யல் ராஜ் தலைமை வகித்தாா். மாநிலச் செயலா் எஸ்.கிருஷ்ணமூா்த்தி முன்னிலை வகித்தாா். கூட்டத்தில் கட்சியின் நிறுவனா் தலைவா் தமிழருவி மணியன் கட்சிக் கொடியினை அறிமுகப்படுத்தி சிறப்புரையாற்றினாா்.

கூட்டத்தில், காமராஜா் மக்கள் கட்சியின் மாநில பொதுச் செயலா் பா.குமரய்யா, தென்மண்டல அமைப்புச் செயலா் கணேசன், கன்னியாகுமரி, கிழக்கு மாவட்டத் தலைவா் கதிரேசன், சிவகங்கை மாவட்டத் தலைவா் அருளானந்து, தேனி மாவட்டத் தலைவா் நாட்ராயன், இளைஞா் அணி பொறுப்பாளா்கள் அ.அரவிந்தன், தினேஷ் ராஜா, அலெக்ஸ் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

முன்னதாக மாவட்டப் பொருளாளா் ஆா்.உதயகுமாா் வரவேற்றாா். மாவட்டச் செயலா் ந.ஈஸ்வரன் நன்றி கூறினாா்.

முழு கட்டுரையைப் படிக்க →