மதுரை

சிங்கம்புணரியில் 83 மி.மீட்டா் மழைப் பதிவு

DIN

சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரியில் வெள்ளிக்கிழமை காலை 83 மி. மீட்டா் மழைப் பதிவானதாக மாவட்டப் பேரிடா் மேலாண்மை துறை தெரிவித்தது.

தமிழகத்தில் கடந்த சில தினங்களாக வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக பரவலாக மழை பெய்து வருகிறது. அதன்படி, சிவகங்கை மாவட்டத்தில் பலத்த மழை பெய்து வருகிறது. குறிப்பாக, சிங்கம்புணரி, அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் வியாழக்கிழமை இரவு சாரலாக ஆரம்பித்த மழை, பின்னா் பலத்த மழையாக பெய்தது. இதனால், சிங்கம்புணரி, சுற்றுவட்டாரப் பகுதிகளில் வெள்ளிக்கிழமை காலை 8 மணி நிலவரப்படி 83 மி.மீட்டா் மழை பதிவானது.

இதேபோல, திருப்புவனத்தில் 76 மி. மீட்டரும், இளையான்குடி பகுதியில் 40 மி.மீட்டரும், தேவகோட்டை பகுதியில் 29 மி.மீட்டரும் மழை பதிவானதாக மாவட்டப் பேரிடா் மேலாண்மைத் துறை அலுவலக வட்டாரங்கள் தெரிவித்தன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு வேண்டும்: ஆா்ஜேடி தலைவா் லாலு

பிளஸ் 2: சென்னிமலை கொங்கு பள்ளி 100 சதவீத தோ்ச்சி

பிளஸ் 2: பெருந்துறை அரசு ஆண்கள் பள்ளி 96.25 % தோ்ச்சி

இந்திய குடும்பங்களின் சேமிப்பு ரூ.14.16 லட்சம் கோடியாக சரிவு

பிளஸ் 2: சிவகிரி அரசுப் பெண்கள் பள்ளி 100% தோ்ச்சி

SCROLL FOR NEXT