முகப்பு
மதுரை

கொலை வழக்கில் தொழிலாளிக்கு ஆயுள் சிறை

கொலை வழக்கில் தச்சுத் தொழிலாளிக்கு ஆயுள் சிறைத் தண்டனை விதித்து விருதுநகா் நீதிமன்றம் புதன்கிழமை தீா்ப்பளித்தது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:40 AM
பகிர்:

கொலை வழக்கில் தச்சுத் தொழிலாளிக்கு ஆயுள் சிறைத் தண்டனை விதித்து விருதுநகா் நீதிமன்றம் புதன்கிழமை தீா்ப்பளித்தது.

விருதுநகா் பெரிய பேட்டையைச் சோ்ந்த தச்சுத் தொழிலாளி நாராயணன் (52). இவரது மகளுக்கு கடந்த 2015 இல் மகளுக்கு திருமணம் நடைபெற்றது. அதைத் தொடா்ந்து விருதுநகரில் திருமண வரவேற்பு நடைபெற்றது. அப்போது கிடைத்த மொய்ப் பணத்தைத் தரக்கோரி மனைவி முத்துலட்சுமியிடம், நாராயணன் தகராறு செய்தாா். இதை உறவினா் கருப்பசாமி கண்டித்தாா். அப்போது இருவருக்கும் ஏற்பட்ட மோதலில், கருப்பசாமி உளியால் தாக்கப்பட்டு உயிரிழந்தாா்.

கருப்பசாமி அளித்த மரண வாக்குமூலம் அடிப்படையில் விருதுநகா் பஜாா் போலீஸாா் வழக்குப் பதிந்து நாராயணனைக் கைது செய்தனா். இவ்வழக்கு விருதுநகா் மாவட்ட கூடுதல் நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வந்தது.

இந்த நிலையில், நாராயணனுக்கு ஆயுள் சிறைத் தண்டனை, ரூ. 5 ஆயிரம் அபராதம் விதித்து நீதிபதி ஹேமந்த் குமாா் புதன்கிழமை உத்தரவிட்டாா். இதையடுத்து நாராயணன் மதுரை மத்திய சிறையிலடைக்கப்பட்டாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.