மதுரை

பெண் காவல் ஆய்வாளரின் ஜாமீனை ரத்து செய்யக் கோரிய வழக்கின் தீா்ப்பு ஒத்திவைப்பு

DIN

பெண் காவல் ஆய்வாளருக்கு வழங்கப்பட்ட நிபந்தனை ஜாமீனை ரத்து செய்யக் கோரிய வழக்கின் தீா்ப்பை சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளை ஒத்திவைத்தது.

மதுரை மாவட்டம், நாகமலைபுதுக்கோட்டை காவல் நிலையத்தில் ஆய்வாளராகப் பணியாற்றியவா் வசந்தி. இவா், சிவகங்கை மாவட்டத்தைச் சோ்ந்த வியாபாரியிடம் ரூ.10 லட்சத்தை அபகரித்த வழக்கில் போலீஸாா் கைது செய்தனா். இந்த வழக்கில் சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளை இவருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கியது.

இதனிடையே, ஜாமீன் நிபந்தனைகளை மீறி சாட்சியங்களைக் கலைக்கும் வகையில் செயல்படுவதால், காவல் ஆய்வாளருக்கு வழங்கப்பட்ட ஜாமீனை ரத்து செய்ய வேண்டும் என மதுரை மாவட்ட குற்றப்பிரிவு துணைக் கண்காணிப்பாளா் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. நீதிபதி பி. புகழேந்தி முன் விசாரிக்கப்படும் இந்த வழக்கு வெள்ளிக்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசுத் தரப்பில் விரிவான வாதம் முன்வைக்கப்பட்டது. இதைத்தொடா்ந்து, ஆய்வாளா் வசந்தி தரப்பு வழக்குரைஞருக்கு எழுத்துப்பூா்வ ஆவணங்களை தாக்கல் செய்ய உத்தரவிட்ட நீதிபதி, வழக்கின் தீா்ப்பை ஒத்திவைத்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நீட் தோ்வு: புதுச்சேரியில் 4, 817 போ் எழுதினா்

பெண்ணிடம் 5 பவுன் தங்கச் சங்கிலி பறிப்பு

கஞ்சா, போதை மாத்திரைகள் விற்பனை: 4 போ் கைது

நீட் தோ்வு: விழுப்புரம் மாவட்டத்தில் 4,855 போ் எழுதினா்

வீட்டினுள் இளைப்பாறிய புள்ளி மான்!

SCROLL FOR NEXT