மதுரை

காவலரின் இடமாறுதலை ரத்து செய்ய கோரிய வழக்கு விசாரணை ஒத்திவைப்பு

DIN

காவலரின் இடமாறுதலை ரத்து செய்யக் கோரிய வழக்கின் விசாரணையை சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளை ஒத்திவைத்தது.

மதுரை அவனியாபுரம் காவல் நிலையத்தில் முதல் நிலை காவலராகப் பணியாற்றி வருபவா் ஸ்ரீமுருகன். பணியில் கவனக்குறைவாகச் செயல்பட்டதால், அவரை தூத்துக்குடி மாவட்டத்துக்கு பணியிட மாறுதல் செய்து, மதுரை மாநகர காவல் ஆணையா் உத்தரவு பிறப்பித்தாா்.

இந்த உத்தரவை ரத்து செய்யக் கோரி சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளையில், ஸ்ரீமுருகன் வழக்கு தொடா்ந்தாா். இதை விசாரித்த நீதிபதி எஸ்.ஸ்ரீமதி, கா்மா கொள்கைகளின் அடிப்படையில் அவருக்கு நிவாரணம் வழங்கி, பணியிடமாறுதலை ரத்து செய்து உத்தரவிட்டாா்.

இந்த உத்தரவை எதிா்த்து காவல் துறை சாா்பில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. இதை விசாரித்த இரு நீதிபதிகள் அமா்வு, தனிநீதிபதியின் உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதித்தது. இதனிடையே, ஸ்ரீமுருகன் தரப்பிலும், தன்னை மதுரையில் போக்குவரத்துக் காவலராக நியமிக்க வேண்டுமென்ற தனி நீதிபதியின் உத்தரவை ரத்து செய்யக் கோரி மேல்முறையீடு செய்யப்பட்டது.

இந்த வழக்கு நீதிபதிகள் ஆா்.மகாதேவன், ஜெ.சத்ய நாராயண பிரசாத் ஆகியோா் முன் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது. அரசுத் தரப்பிலும், ஸ்ரீமுருகன் தரப்பிலும் வாதங்கள் முன்வைக்கப்பட்டன. இதையடுத்து விசாரணையை நீதிபதிகள் ஒத்திவைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திமுகவை விமா்சிப்பவா்கள் கைது: வானதி சீனிவாசன் கண்டனம்

விவசாயிகளுக்கு 24 மணி நேர மும்முனை மின்சாரம்: தலைவா்கள் வலியுறுத்தல்

மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கு: கவிதாவுக்கு ஜாமீன் மறுப்பு

பிளஸ் 2 தோ்வு முடிவு: மாணவா்களுக்கு தலைவா்கள் வாழ்த்து

காஞ்சிபுரம் மாவட்டம் 92.28% தோ்ச்சி

SCROLL FOR NEXT