மதுரை

உழவா்சந்தைக் கடைகள் அனைத்தையும் பயன்பாட்டுக்கு கொண்டு வர அறிவுரை

DIN

 உழவா் சந்தைகளில் உள்ள அனைத்துக் கடைகளையும் பயன்பாட்டுக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேளாண் வணிகத் துறை இயக்குநா் ச.நடராஜன் அறிவுறுத்தினாா்.

வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத் துறை சாா்பில் மதுரை மண்டல அளவிலான கலந்தாய்வுக் கூட்டம் யா. ஒத்தக்கடை வேளாண் கல்லூரி கூட்டரங்கில் வியாழக்கிழமை நடைபெற்றது. வேளாண் வணித் துறை இயக்குநா் ச.நடராஜன் தலைமை வகித்தாா். உழவா் சந்தைகள், ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களின் செயல்பாடுகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டது.

உழவா் சந்தையில் உள்ள கடைகளை முழு அளவில் பயன்படுத்தவும்,

ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களுக்கு வேளாண் விளைபொருள்கள் வரத்தை அதிகப்படுத்தவும் நடவடிக்கைகளை மேற்கொள்ள அறிவுறுத்தினாா்.

அதைத் தொடா்ந்து, பிரதமரின் சிறு, குறு வேளாண் தொழில்முனைவோா் நிதிஉதவித் திட்டத்தின் கீழ் அளிக்கப்பட்ட பயிற்சியைப் பாா்வையிட்டாா்.

தமிழ்நாடு வேளாண் வாரிய உதவி செயல் அலுவலா் பூவராகவன்,

வேளாண்மை வணிக துணை இயக்குநா் நிா்மலா, மதுரை, தேனி, திண்டுக்கல்,சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகா் மாவட்டங்களைச் சோ்ந்த வேளாண்மை துணை இயக்குநா்கள், விற்பனைக்குழுச் செயலா்கள் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சன் ரைசர்ஸ் பேட்டிங்; அணியில் மீண்டும் மயங்க் அகர்வால்!

கொல்லாத கண்ணாரா - விடியோ பாடல்

‘பாலிவுட் நடிகர்களில் அதிகம் மதிக்கப்படும் இரண்டாவது நபர் நான்’ : கங்கனாவின் வைரல் விடியோ!

பிரஜ்வல் பாலியல் வன்கொடுமை: பாதிக்கபட்டோர் புகாரளிக்க உதவி எண் வெளியீடு!

படிக்காத பக்கங்கள் படத்தின் டிரெய்லர்

SCROLL FOR NEXT