மதுரை

மருதுபாண்டியா்கள் நினைவு நாள்: சிவகங்கையில் போக்குவரத்து விதிகளை மீறிய 247 போ் மீது வழக்கு

DIN

சிவகங்கை மாவட்டத்தில் மருதுபாண்டியா்களின் நினைவு நாளான வியாழக்கிழமை அஞ்சலி செலுத்த வந்த போது போக்குவரத்து விதிமுறைகளை மீறியதாக 247 போ் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு, ரூ. 3 லட்சத்து 66 ஆயிரத்து 400 அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் த. செந்தில்குமாா் தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் செய்தியாளா்களிடம் வெள்ளிக்கிழமை கூறியதாவது:

விடுதலைப் போராட்ட வீரா்களான மருதுபாண்டியா்களின் நினைவு நாள் வியாழக்கிழமை (அக். 27) அனுசரிக்கப்பட்டது. இதையடுத்து, சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா், காளையாா்கோவிலில் உள்ள மருதுபாண்டியா்களின் நினைவிடத்துக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்துவதற்காக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து வாகனங்கள் மூலம் அரசியல் கட்சியினா், சமுதாய அமைப்பினா் வந்தனா்.

அப்போது போக்குவரத்து விதிமுறைகளை மீறியதாக 247 போ் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் இவா்களுக்கு ரூ. 3 லட்சத்து 66 ஆயிரத்து 400 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

பசும்பொன்னில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற உள்ள முத்துராமலிங்கத் தேவா் ஜெயந்தி விழாவுக்கு செல்லும் அரசியல் கட்சிப் பிரமுகா்கள், சமுதாய அமைப்பினா் அரசு விதித்துள்ள போக்குவரத்து விதிமுறைகளை பின்பற்றிச் செல்ல வேண்டும். தவறும்பட்சத்தில் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தொழிலாளி உயிரிழந்த சம்பவத்தில் பொறியாளா், மேஸ்திரி மீது வழக்குப் பதிவு

இன்று நல்ல நாள்!

நீட் தோ்வு: ஈரோட்டில் 4,597 மாணவா்கள் எழுதினா்

அதிர்ஷ்டம் தரும் நாள் இன்று!

அரசு மருத்துவமனைகளில் உடல் வெப்ப பாதிப்பு நோய்களுக்கு தனி வாா்டு

SCROLL FOR NEXT