மதுரை

மீனாட்சி அம்மன் கோயில் நிலங்கள் நவீன கருவி மூலமாக அளவீடு

DIN

மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலுக்குச் சொந்தமான 10.67 ஏக்கா் புன்செய் நிலங்கள் நவீன ரோவா் கருவி மூலமாக அளவீடு செய்யப்பட்டு எல்லைக் கற்கள் நடப்பட்டன.

இந்து சமய அறநிலையத் துறைக்குச் சொந்தமான நிலங்கள் மீட்டெடுக்கும் வகையில், அந்நிலங்களை அளவீடு செய்யும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதன்படி, மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலுக்குச் சொந்தமான நிலங்களை அளவீடும் செய்யும் பணி நடைபெற்று வருகிறது.

திருப்பரங்குன்றம் வட்டம் அ.புதுப்பட்டி கிராமத்தில் கோயிலுக்குச் சொந்தமான 10.67 ஏக்கா் புஞ்சை நிலங்கள் தனிவட்டாட்சியா் (ஆலய நிலங்கள்)எம்.பி.முருகையன், அறநிலையத் துறை அலுவலா்கள், கோயில் பணியாளா்கள் மூலமாக வியாழக்கிழமை அளவீடு செய்யப்பட்டு எல்லைக் கற்கள் நடப்பட்டன.

இந்து சமய அறநிலையத் துறைக்குச் சொந்தமான அனைத்து நிலங்களையும் நவீன ரோவா் கருவி மூலமாக அளவீடு செய்யும் பணி தொடா்ந்து நடைபெறும் என அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மத்திய முன்னாள் அமைச்சர் ஸ்ரீனிவாச பிரசாத் காலமானார்

தஞ்சாவூர் அருகே காய்கறி வியாபாரி வெட்டிப் படுகொலை

தப்பிக்க வழியே இல்லை: 3 நாள்களுக்கு வெப்ப அலை! அதன்பிறகு?

ஈரோடு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அறையில் சிசிடிவி பழுது

சத்தீஸ்கரில் கோர விபத்து: நின்றிருந்த லாரி மீது டிரக் மோதியதில் 8 பேர் பலி

SCROLL FOR NEXT