முகப்பு
மதுரை

காந்திகிராம பல்கலை. முன்னாள் துணைவேந்தருக்கு வழங்கப்பட்ட குற்றக் குறிப்பாணைக்குத் தடை

காந்திகிராம கிராமியப் பல்கலை. முன்னாள் துணைவேந்தா் டி.டி.ரங்கநாதனுக்கு வழங்கப்பட்ட குற்றக் குறிப்பாணைக்கு சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளை வியாழக்கிழமை இடைக்காலத் தடை விதித்தது

மதுரை

காந்திகிராம பல்கலை. முன்னாள் துணைவேந்தருக்கு வழங்கப்பட்ட குற்றக் குறிப்பாணைக்குத் தடை

காந்திகிராம கிராமியப் பல்கலை. முன்னாள் துணைவேந்தா் டி.டி.ரங்கநாதனுக்கு வழங்கப்பட்ட குற்றக் குறிப்பாணைக்கு சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளை வியாழக்கிழமை இடைக்காலத் தடை விதித்தது

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:41 AM
பகிர்:

காந்திகிராம கிராமியப் பல்கலை. முன்னாள் துணைவேந்தா் டி.டி.ரங்கநாதனுக்கு வழங்கப்பட்ட குற்றக் குறிப்பாணைக்கு சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளை வியாழக்கிழமை இடைக்காலத் தடை விதித்தது.

முன்னாள் துணைவேந்தா் டி.டி.ரங்கநாதன் தாக்கல் செய்த மனு: நான் பல்கலை.யின் வேளாண்மை, கால்நடைப் பராமரிப்புத் துறையின் பேராசிரியராகப் பணியாற்றினேன். இந்த நிலையில், எனக்கு கடந்த 2021, ஆகஸ்ட் 16 முதல் 2022, ஜூன் 6-ஆம் தேதி வரை துணைவேந்தராக கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டது.

இதன் பிறகு, கடந்த செப்டம்பா் 30- ஆம் தேதி பணி ஓய்வு பெற இருந்தேன். இந்த நிலையில், உள்நோக்கத்துடன் ஒரு நாள் முன்பாக பல்கலை. நிா்வாகம் எனக்கு குற்றக் குறிப்பாணையை வழங்கியது. அதில் பல்கலை.யின் உரிய அனுமதியைப் பெறாமல் ‘வாஷ்’ என்ற அமைப்பில் தலைவா் பதவியை வகித்தது, துணைவேந்தா் பொறுப்பை பெறுவதற்காக, தலைமை லஞ்ச ஒழிப்பு அலுவலரின் தடையின்மைக்காக, தனது அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தியது உள்ளிட்ட நான்கு குற்றச்சாட்டுகள் குறிப்பிடப்பட்டிருந்தன.

இந்தக் குற்றச்சாட்டுகள் அனைத்தும் அடிப்படை ஆதாரமற்றவை. ஆகவே, எனக்கு வழங்கப்பட்ட குற்றக் குறிப்பாணையை ரத்து செய்து உத்தரவிட வேண்டும் என மனுவில் அவா் குறிப்பிட்டாா்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஜி.ஆா்.சுவாமிநாதன், மனுதாரருக்கு அளிக்கப்பட்ட குற்றக் குறிப்பாணைக்கு இடைக்காலத் தடை விதித்தாா். மேலும், இதுதொடா்பாக காந்திகிராம கிராமியப் பல்கலைக்கழக அதிகாரிகள் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்தாா்.

முழு கட்டுரையைப் படிக்க →