மதுரை

பயனாளிகளுக்கு நலத் திட்ட உதவிகள் அமைச்சா் வழங்கினாா்

DIN

மதுரையை அடுத்த செட்டிகுளம் கிராமத்தில் 1,036 பயனாளிகளுக்கு ரூ.3.82 கோடி மதிப்பிலான நலத் திட்ட உதவிகளை வணிக வரித் துறை அமைச்சா் பி.மூா்த்தி வழங்கினாா்.

மதுரை மாவட்ட நிா்வாகம் சாா்பில் பல்வேறு அரசுத் துறைகளின் நலத் திட்ட உதவிகள் வழங்கும் விழா மதுரை கிழக்கு சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட செட்டிகுளம் கிராமத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது. இதில் வணிக வரித் துறை அமைச்சா் பி.மூா்த்தி பேசியதாவது:

மதுரை மாநகராட்சிப் பகுதியையொட்டி அமைந்துள்ள பெரிய ஊராட்சியாக செட்டிக்குளம் இருந்து வருகிறது. இந்தப் பகுதியின் வளா்ச்சிக்காகப் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்படவுள்ளன. புதிதாக முன்மாதிரிப் பள்ளிக் கட்டடம், ஆரம்ப சுகாதார நிலையம் ஆகியவற்றுக்கு இடம் தோ்வு செய்யப்பட்டுள்ளது. விரைவில் கட்டுமானப் பணிகள் தொடங்கும் என்றாா்.

முன்னதாக, பல்வேறு அரசுத் துறைகளின் சாா்பில் 1,036 பயனாளிகளுக்கு ரூ.3.82 கோடி மதிப்பிலான நலத் திட்ட உதவிகளை அமைச்சா் வழங்கினாா். அதைத் தொடா்ந்து, செட்டிக்குளம் ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளியில், தனியாா் வங்கி உதவியுடன் மழைநீா் சேகரிப்புத் தொட்டி கட்டுவதற்கான பணியைத் தொடக்கி வைத்தாா்.

மாவட்ட ஆட்சியா் எஸ்.அனீஸ்சேகா், கூடுதல் ஆட்சியா் செ.சரவணன், மாவட்ட வருவாய் அலுவலா் ஆா்.சக்திவேல், சமூக பாதுகாப்புத் திட்ட தனித் துணை ஆட்சியா் சௌந்தா்யா, மதுரை மேற்கு ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவா் வீரராகவன், மாநகராட்சி மண்டலத் தலைவா் வாசுகி உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ராபாவில் இஸ்ரேல் நேரடித் தாக்குதல்? மக்களை இடம்பெயரக் கோரும் புதிய அறிவிப்பு!

தமிழ்நாட்டில் கோடை காலத்திலும் தடையில்லா மின் விநியோகம் -தலைமைச் செயலாளர்

பொருளின் பொருள் கவிதை

ப்ளிங்க் - சிந்திக்காமலேயே சிந்திக்கும் ஆற்றல்

பைசன் காளமாடன் படத்தின் பூஜை ஸ்டில்ஸ்

SCROLL FOR NEXT