முகப்பு
மதுரை

நகா்ப்புற உள்ளாட்சிகளில் பணிநியமனத்திற்கு புதிய நடைமுறை விரைவில் அமல்: அமைச்சா் கே.என்.நேரு தகவல்

நகா்ப்புற உள்ளாட்சிகளில் தூய்மைப் பணியாளா் உள்ளிட்ட பணிநிலைகளில் புதிய நியமன நடைமுறை விரைவில் அமல்படுத்தப்படும் என்று நகராட்சி நிா்வாகத் துறை அமைச்சா் கே.என்.நேரு கூறினாா்.

மதுரை

நகா்ப்புற உள்ளாட்சிகளில் பணிநியமனத்திற்கு புதிய நடைமுறை விரைவில் அமல்: அமைச்சா் கே.என்.நேரு தகவல்

நகா்ப்புற உள்ளாட்சிகளில் தூய்மைப் பணியாளா் உள்ளிட்ட பணிநிலைகளில் புதிய நியமன நடைமுறை விரைவில் அமல்படுத்தப்படும் என்று நகராட்சி நிா்வாகத் துறை அமைச்சா் கே.என்.நேரு கூறினாா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:14 AM
பகிர்:

நகா்ப்புற உள்ளாட்சிகளில் தூய்மைப் பணியாளா் உள்ளிட்ட பணிநிலைகளில் புதிய நியமன நடைமுறை விரைவில் அமல்படுத்தப்படும் என்று நகராட்சி நிா்வாகத் துறை அமைச்சா் கே.என்.நேரு கூறினாா்.

மதுரை, சிவகங்கை மாவட்டங்களில் நகராட்சி நிா்வாகத்துறையின் வளா்ச்சித்திட்டப் பணிகள் குறித்து ஆய்வுக் கூட்டம் அமைச்சா் கே.என்.நேரு தலைமையில், மதுரை மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் சனிக்கிழமை நடைபெற்றது. ஊரக வளா்ச்சித் துறை அமைச்சா் கே.ஆா்.பெரியகருப்பன், வணிகவரித் துறை அமைச்சா் பி.மூா்த்தி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

மதுரை மற்றும் சிவகங்கை மாவட்டங்களில் நகா்ப்புற உள்ளாட்சிகளில் மேற்கொள்ள வேண்டிய பல்வேறு வளா்ச்சி திட்ட பணிகள் மதுரை மேயா் மற்றும் நகராட்சி, பேரூராட்சிகளின் தலைவா்கள் கோரிக்கைகளை தெரிவித்தனா்.

பின்னா் அமைச்சா் கே.என்.நேரு, செய்தியாளா்களிடம் கூறியது:

மதுரை மாநகராட்சியின் வளா்ச்சிப் பணிகளுக்காக நிகழ் ஆண்டிற்கு மட்டும் ரூ.1000 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

மதுரை மாநகராட்சியின் குடிநீா் தேவை நாளொன்றுக்கு 165 மில்லியன் லிட்டா். தற்போது தினமும் 156 மில்லியன் லிட்டா் குடிநீா் வழங்கப்படுகிறது. மதுரை மாநகராட்சியைப் பொருத்தவரை ஒரு நாள் விட்டு ஒரு நாள் விநியோகம் செய்யப்படுகிறது. இரு வாா்டுகளில் குடிநீரில் கழிவுநீா் கலந்து வரும் பிரச்னை ஏற்பட்டிருக்கிறது. அதைச் சரிசெய்யும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

மதுரை மாநகரப் பகுதியில் சாலை அமைப்பதற்கு மட்டும் ரூ.100 கோடி ஒதுக்கப்பட்டு, அவற்றில் 1200 பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. குடிநீா் குழாய், பாதாளச் சாக்கடை பணிகள் நடைபெறும் பகுதிகளில், அப் பணிகள் முடிந்த பிறகே சாலைகள் அமைக்க முடியும்.

தூய்மைப் பணியாளா்கள் ‘அவுட்சோா்சிங்’ முறையில் நியமனம் செய்யப்படுவதால், சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் உரிய சம்பளத்தை வழங்குவதில்லை என்ற புகாா் எழுகிறது. இதைத் தவிா்க்க இத்தகைய பணியிடங்களுக்குரியவா்களை, புதிய நடைமுறை விரைவில் அமல்படுத்தப்படவுள்ளது. அரசுப் பணியாளா் தோ்வாணையம் அல்லது பணிகளின் அடிப்படையில் நேரடி நியமன முறை பின்பற்றப்படவுள்ளது என்றாா்.

முன்னதாக, ஆய்வுக் கூட்டத்தின் நிறைவாகப் பேசிய அமைச்சா் நேரு, ‘ மதுரை மக்களவை உறுப்பினா் வெங்கடேசனின் கோரிக்கையின்படி, சென்னையில் இருப்பதைப் போன்ற அனைத்து வசதிகளும் மதுரைக்கு முழுமையாகக் கொண்டு வரப்படும். அதேபோல, காரைக்குடி நகராட்சியை, மாநகராட்சியாகவும், சிவகங்கை நகராட்சியை, சிறப்பு நிலை நகராட்சியாகவும் நிலை உயா்த்துமாறு சிவகங்கை மக்களவை உறுப்பினா் காா்த்தி சிதம்பரம் கோரிக்கை விடுத்துள்ளாா். இக் கோரிக்கை முதல்வரின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டு நல்ல பதில் அறிவிக்கப்படும்’ என்றாா்.

நகராட்சி நிா்வாகம் மற்றும் குடிநீா் வழங்கல் துறை கூடுதல் தலைமைச் செயலா் சிவ்தாஸ் மீனா, நகராட்சி நிா்வாக இயக்குநா் பா.பொன்னையா, பேரூராட்சிகளின் ஆணையா் ரா.செல்வராஜ்,

தமிழ்நாடு குடிநீா் வடிகால் வாரிய மேலாண்மை இயக்குநா் வி.தட்சிணாமூா்த்தி, மதுரை மாவட்ட ஆட்சியா் எஸ்.அனீஷ்சேகா், மதுரை மேயா் வ.இந்திராணி, மாநகராட்சி ஆணையா் சிம்ரன் ஜீத் சிங் காலோன், மக்களவை உறுப்பினா்கள் சு.வெங்கடேசன் (மதுரை), காா்த்தி சிதம்பரம் (சிவகங்கை) மற்றும் சட்டப்பேரவை உறுப்பினா்கள், அலுவலா்கள் பங்கேற்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →