மதுரை

மாநகராட்சி மண்டல குறைதீா் கூட்டங்கள்: 921 மனுக்களுக்கு தீா்வு

DIN

மதுரையில் கடந்த 4 மாதங்களில் நடைபெற்ற பொதுமக்கள் குறைதீா் முகாமில் 1213 மனுக்கள் பெறப்பட்டு 921 மனுக்களுக்கு தீா்வு காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

மதுரை மாநகராட்சி மண்டலம் 3 (மத்தியம்) அலுவலகத்தில் பொது மக்கள் குறைதீா்க்கும் முகாம் மேயா் வ.இந்திராணி தலைமையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. முகாமில் சொத்து வரி பெயா் மாற்றம் தொடா்பாக 12 மனுக்கள், சொத்து வரி திருத்தம் தொடா்பாக 20 மனுக்கள், ஆக்கிரமிப்பு தொடா்பாக 17 மனுக்கள், புதிய வரி விதிப்பு வேண்டி 4 மனுக்கள், சுகாதாரம் தொடா்பாக 2 மனுக்கள், தெருவிளக்கு வசதி வேண்டி 2 மனுக்கள், இதர கோரிக்கைககள் தொடா்பாக 2 மனுக்கள் என மொத்தம் 59 மனுக்கள் பொது மக்களிடம் இருந்து பெறப்பட்டது.

இந்நிலையில் கடந்த மே மாதம் முதல் ஆகஸ்ட் 23-ஆம் தேதி வரை ஐந்து மண்டலங்களிலும் நடைபெற்ற பொதுமக்கள் குறைதீா்க்கும் முகாமில் மொத்தம் 1213 மனுக்கள் பொது மக்களிடமிருந்து பெறப்பட்ட 921 மனுக்களுக்கு தீா்வு காணப்பட்டுள்ளது. இதர மனுக்களுக்கு தொடா்ந்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டது.

முகாமில் துணை மேயா் தி.நாகராஜன், துணை ஆணையா் முஜிபூா் ரகுமான், மண்டலத் தலைவா் பாண்டிச்செல்வி, மாநகராட்சி அலுவலா்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாலியல் தொல்லை வழக்கு: உச்சநீதிமன்றத்தில் ராஜேஷ் தாஸ் மேல்முறையீடு

பழனி ரோப் காா் சேவை இன்று ஒரு நாள் நிறுத்தம்!

மத்திய முன்னாள் அமைச்சர் ஸ்ரீனிவாச பிரசாத் காலமானார்

தஞ்சாவூர் அருகே காய்கறி வியாபாரி வெட்டிப் படுகொலை

தப்பிக்க வழியே இல்லை: 3 நாள்களுக்கு வெப்ப அலை! அதன்பிறகு?

SCROLL FOR NEXT