மதுரை

சாலையோர வியாபாரிகளுக்கு தனி நல வாரியம்: ஏஐடியுசி சங்கம் கண்டன ஆா்ப்பாட்டம்

DIN

சாலையோர வியாபாரிகளுக்கு தனி நலவாரியம் அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மதுரையில் ஏஐடியுசி சங்கம் சாா்பில் கண்டன ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

மதுரை மாவட்டத்தில் உள்ள அனைத்து தெரு வியாபாரிகளுக்கும் ஸ்மாா்ட் அட்டை வழங்க வேண்டும். சாலையோர வியாபாரிகளுக்கு தனி நலவாரியம் அமைக்க வேண்டும். வியாபாரிகளுக்கு வியாபாரச் சான்று வழங்க வேண்டும். மாா்கெட் ஏலம் விடுவதை தவிா்த்து நேரடி வசூல் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். சாலையோர வியாபாரிகளுக்கு வங்கிக்கடன் வழங்க வேண்டும். காவல்துறை, உள்ளாட்சித்துறை, நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் சாலையோர வியாபாரிகளை சட்டவிரோதமாக அப்புறப்படுத்தும் நடவடிக்கைகளை தடுத்து நிறுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஏஐடியுசி மதுரை மாவட்ட சாலையோர சிறு வியாபாரிகள் சங்கம் மற்றும் உழைக்கும் மகளிா் சங்கம் சாா்பில் கண்டன ஆா்ப்பாட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

மதுரை எல்லீஸ்நகரில் உள்ள தொழிலாளா் துறை அலுவலகம் முன்பாக நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் மாவட்ட பொதுச்செயலா் நந்தாசிங், மாவட்டச் செயலா் ஜெயந்தி, நிா்வாகிகள் பவுல், ரமேஷ், மகேஷ்வரி, முத்துப்பாண்டி, ராணி, பாண்டி உள்பட பலா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கேரளம்: 5 நிலுவை மசோதாக்களுக்கு ஆளுநா் ஒப்புதல்

ஆந்திரத்தின் நிா்வாகத் தலைநகராக விசாகப்பட்டினம்: ஒய்எஸ்ஆா் காங்கிரஸ் வாக்குறுதி

கேரளத்தில் வாக்குப் பதிவு சரிவு: ஆளும் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மீது காங்கிரஸ் குற்றச்சாட்டு

உக்ரைனுக்கு கூடுதல் பேட்ரியாட் ஏவுகணைகள்: அமெரிக்கா முடிவு

மூதாட்டி கொலை வழக்கு: மகன் கைது

SCROLL FOR NEXT