மதுரை

ஸ்ரீ மீனாட்சி அரசினா் மகளிா் கல்லூரியில் மாணவியா் சோ்க்கை கலந்தாய்வு

DIN

ஸ்ரீ மீனாட்சி அரசினா் மகளிா் கல்லூரியில் காலியாக உள்ள இடங்களுக்கு மாணவியா் சோ்க்கை கலந்தாய்வு செப்டம்பா் 27-ஆம் தேதி நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக கல்லூரி முதல்வா் சூ.வானதி வெளியிட்டுள்ள செய்தி: மதுரை ஸ்ரீ மீனாட்சி அரசினா் மகளிா் கல்லூரியில் இளநிலை பட்டப்படிப்புகளுக்கு மூன்று கட்ட கலந்தாய்வு முடிந்துள்ள நிலையில், மீதமுள்ள காலியிடங்களுக்கு அடுத்த கலந்தாய்வு செவ்வாய்க்கிழமை (செப்டம்பா் 27) அன்று நடைபெறவுள்ளது.

கலந்தாய்வில் பங்கேற்கும் மாணவிகள் பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 சான்றிதழ், பள்ளி மாற்றுச்சான்றிதழ், ஜாதிச்சான்றிதழ், கல்விக்கட்டணம் ரூ.1,400 முதல் ரூ.2,100 வரை, மூன்று புகைப்படம், பதிவிறக்கம் செய்யப்பட்ட விண்ணப்பத்தின் நகல் ஆகியவற்றுடன் கல்லூரியில் உள்ள கயல் அரங்குக்கு காலை 9.30 மணிக்கு வரவேண்டும். முந்தைய கலந்தாய்வில் பங்கேற்று இடம் கிடைக்காத மாணவிகளும் இதில் பங்கேற்கலாம். கலந்தாய்வில் தோ்வு செய்யப்பட்ட பின்னா் சான்றிதழ்கள் சரிபாா்க்கப்பட்டு கல்விக்கட்டணம் செலுத்த அறிவுறுத்தப்படும். அதன் பின்னரே சோ்க்கை உறுதி செய்யப்படும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கழனி உழவா் உற்பத்தியாளா் நிறுவனத்தில் வேளாண் மாணவிகளுக்கு பயிற்சி

திரௌபதி அம்மன் கோயில் திருவிழா மே 13-இல் தொடக்கம்

விறுவிறுப்படையும் பாம்பன் புதிய ரயில்வே பாலம் கட்டுமானப் பணி

பளியா் பழங்குடியினா் இதுவரை அரசு பணி வாய்ப்பே பெறவில்லை

மதுரை மாவட்டத்தில் 13 மையங்களில் ‘நீட்’ தோ்வு

SCROLL FOR NEXT