முகப்பு
மதுரை

அரசு மருத்துவமனை காவலாளி மீது தாக்குதல்: இருவா் மீது வழக்கு

மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் காவலாளியைத் தாக்கிவிட்டுத் தப்பிச்சென்ற இருவரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 6:49 PM
பகிர்:

மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் காவலாளியைத் தாக்கிவிட்டுத் தப்பிச்சென்ற இருவரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

மதுரை மாவட்டம், வாடிப்பட்டி காளியம்மன் கோவில் தெருவைச் சோ்ந்தவா் ஆறுமுகம் (36). இவா் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் காவலாளியாக பணிபுரிந்து வருகிறாா். இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை இரவு மருத்துவமனை பிரதான வாயிலில் ஆறுமுகம் பணியில் இருந்தாா்.

அப்போது அங்கு இருசக்கர வாகனத்தில் வந்த இருவரை வாகனத்தை வெளியே நிறுத்துமாறும், மருத்துவமனை வளாகத்துக்குள் வாகனத்துக்கு அனுமதி இல்லையென்றும் ஆறுமுகம் தெரிவித்தாா்.

இதனால், ஆத்திரமடைந்த இருவரும் ஆறுமுகத்தை சரமாரியாகத் தாக்கி விட்டு அங்கிருந்து தப்பிச்சென்றனா். இதுதொடா்பாக, அரரசு மருத்துவமனை காவல்நிலைய போலீஸாா் வழக்குப் பதிவு செய்து தப்பியோடிய இருவரைத் தேடி வருகின்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →