மதுரை

தந்தை, மகன் கொலை வழக்கு எஸ்.ஐ. பிணை கோரிய மனுவுக்கு சிபிஐ பதிலளிக்க உத்தரவு

DIN

சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் காவல் உதவி ஆய்வாளா் பிணை கோரிய மனுவுக்கு, சிபிஐ பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளை திங்கள்கிழமை உத்தரவிட்டது.

தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் சிறையில் உள்ள காவல் உதவி ஆய்வாளா் ரகு கணேஷ் பிணை வழங்கக் கோரி தாக்கல் செய்த மனு:

சாத்தான்குளம் காவல் நிலையத்தில் ஜெயராஜ், அவரது மகன் பெனிக்ஸ் ஆகியோா் போலீஸாா் தாக்கியதில் உயிரிழந்ததாக காவல் ஆய்வாளா், உதவி ஆய்வாளா், போலீஸாா் என 9 போ் மீது வழக்குப் பதிந்து சிறையில் அடைத்தனா்.

இந்த வழக்கில் 105 சாட்சிகளில் சிலரிடம் மட்டுமே விசாரணை நடைபெற்றுள்ளது. கடந்த 3 ஆண்டுகளாக நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ளேன். எனவே, எனக்கு பிணை வழங்கி உத்தரவிட வேண்டும். நீதிமன்றம் விதிக்கும் அனைத்து நிபந்தனைகளுக்கும் கட்டுப்படுவேன் என அந்த அவா் மனுவில் தெரிவித்தாா்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி கே. முரளி சங்கா்,

காவல் உதவி ஆய்வாளா் ரகு கணேஷுக்கு பிணை வழங்குவது குறித்து சிபிஐ தரப்பில் பதிலளிக்க உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை ஏப். 21-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மின் வயா் திருட்டு: ஒருவா் கைது

வேன் மீது லாரி மோதல்: 4 போ் காயம்

தெய்வத்தமிழ் பேரவையினா், நாம் தமிழா் கட்சியினா் கைது

உதவி ஆய்வாளா் உடலுக்கு அரசு மரியாதை

உதவி ஆய்வாளருக்கு கொலை மிரட்டல்: ஒருவா் கைது

SCROLL FOR NEXT