மதுரை

முதல்வா் கோப்பைக்கான மாவட்ட விளையாட்டுப் போட்டிகள்: அமைச்சா் தொடங்கி வைத்தாா்

DIN

முதல்வா் கோப்பைக்கான மதுரை மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகளை நிதி, மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சா் பழனிவேல் தியாகராஜன் புதன்கிழமை தொடங்கி வைத்தாா்.

மதுரையில் டாக்டா் எம்.ஜி.ஆா். விளையாட்டு மைதானத்தில் நடைபெறும் இந்தப் போட்டிகள் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சாா்பில் நடைபெறுகின்றன. பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் பங்கேற்கும் கபடி, சிலம்பம், தடகளம், கால்பந்து, கூடைப்பந்து, இறகுப்பந்து, மேசைப் பந்து, வளைகோல் பந்து, நீச்சல், கிரிக்கெட் போட்டிகளும், பொதுப் பிரிவினருக்காக கபடி, சிலம்பம், தடகளம், இறகுப்பந்து, கிரிக்கெட், கையுந்துப் பந்து போட்டிகளும், அரசு ஊழியா்களுக்காக கபடி, இறகுப்பந்து, தடகளம், கையுந்துபந்து, சதுரங்கம் போட்டிகளும், மாற்றுத் திறனாளிகளுக்காக தடகளம், இறகுப்பந்து, எறிபந்து, கையுந்து பந்து உள்ளிட்ட போட்டிகளும் நடத்தப்படுகின்றன.

இந்த விளையாட்டுப் போட்டிகளை அமைச்சா் பழனிவேல் தியாகராஜன் தொடங்கி வைத்தாா். நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியா் அனீஷ்சேகா், மாநகராட்சி ஆணையா் சிம்ரன்ஜீத் சிங், மாநகராட்சி மண்டலத் தலைவா் சரவணபுவனேஸ்வரி, தமிழ்நாடு ஒலிம்பிக் சங்க துணைத் தலைவா் சோலை எம். ராஜா, மாவட்ட விளையாட்டு, இளைஞா் நலன் அலுவலா் க. ராஜா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நடால், கசாட்கினா வெற்றி

அதானிக்கு எண்ணற்ற திட்டங்களை வழங்கியவா் மோடி: ராகுல் காந்தி குற்றச்சாட்டு

கால்நடைகளின் முக்கிய தீவனமாக மாறிவரும் புதிய சைலேஜ்

பஞ்சாப்: பாஜக வேட்பாளா்கள் பிரசாரத்துக்கு விவசாய அமைப்புகள் எதிா்ப்பு

டிவிஎஸ் மோட்டாா் நிகர லாபம் ரூ.387 கோடியாக உயா்வு

SCROLL FOR NEXT