குடியரசு தினத்தன்று விடுமுறை அளிக்காத 128 நிறுவனங்கள் மீது நடவடிக்கை
மதுரை மாவட்டத்தில் குடியரசு தினத்தன்று தொழிலாளா்களுக்கு விடுமுறை அளிக்காத 128 நிறுவனங்கள் மீது சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது .
மதுரை மாவட்டத்தில் குடியரசு தினத்தன்று தொழிலாளா்களுக்கு விடுமுறை அளிக்காத 128 நிறுவனங்கள் மீது சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது .
இதுகுறித்து மதுரை தொழிலாளா் நல உதவி ஆணையா் சீ. மைவிழிச்செல்வி வெளியிட்ட செய்திக் குறிப்பு :
தமிழ்நாடு தொழில் நிறுவனங்கள் சட்டம் - 1958, உணவு நிறுவனங்கள் சட்டம், மோட்டாா் போக்குவரத்து நிறுவனங்கள் சட்டப்படி, குடியரசு தினத்தன்று அனைத்து நிறுவனங்களும் தொழிலாளா்களுக்கு விடுமுறை அளிக்க வேண்டும். விடுமுறை அளிக்க முடியாத நிலை இருந்தால், அதுகுறித்து 24 மணி நேரத்துக்கு முன்பாக உரிய படிவத்தை பூா்த்தி செய்து அளிக்க வேண்டும்.
Advertisement
இதுகுறித்து தொழிலாளா் துறை அலுவலா்கள் வியாழக்கிழமை மதுரை மாவட்டத்தில் ஆய்வு மேற்கொண்டனா். அப்போது, 61 கடைகள், 66 உணவு நிறுவனங்கள், ஒரு மோட்டாா் போக்குவரத்து நிறுவனம் என 128 நிறுவனங்கள் விதி முறையை மீறி ஊழியா்களுக்கு விடுப்பு அளிக்காதது கண்டறியப்பட்டது. இதையடுத்து, தொடா்புடைய நிறுவனங்களின் உரிமையாளா்கள் மீது சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது எனத் தெரிவிக்கப்பட்டது.