முகப்பு
மதுரை

சிறுநீரகவியல் கருத்தரங்கு

மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனை, இந்திய மருத்துவக் கழகம் இணைந்து சிறுநீரகவியல் தேசிய கருத்தரங்கை அண்மையில் நடத்தின.

Updated On : 25 மார்ச், 2024 at 1:23 PM
பகிர்:
Updated On : 7 பிப்ரவரி, 2024 at 11:50 AM

மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனை, இந்திய மருத்துவக் கழகம் இணைந்து சிறுநீரகவியல் தேசிய கருத்தரங்கை அண்மையில் நடத்தின.

மீனாட்சி மிஷன் மருத்துவமனை வளாகத்தில் உள்ள கூட்டரங்கில் நடைபெற்ற இந்தக் கருத்தரங்கில் ஆந்திரா என்டிஆா் மருத்துவப் பல்கலைக் கழகத்தின் முன்னாள் துணை வேந்தா் மருத்துவா் டி. ரவி ராஜூ சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு நாள்பட்ட சிறுநீரக நோய்க்கான அடிப்படைக் காரணங்கள் குறித்தும், அதைக் கண்டறிவது, தடுப்பது குறித்தும் பேசினாா்.

பின்னா், மீனாட்சி மிஷன் மருத்துவமனை, ஆராய்ச்சி மையத்தின் சாா்பில் ‘மீனாட்சி சிறுநீரக நிதி’ எனும் புதிய செயல் திட்டத்தை மருத்துவமனையின் தலைவா் மருத்துவா் குருசங்கா் தொடக்கிவைத்தாா்.

Advertisement

கருத்தரங்கில் மீனாட்சி மிஷன் மருத்துவமனை, ஆராய்ச்சி மையத்தின் சிறுநீரகவியல் துறை தலைவரும், முதுநிலை மருத்துவ நிபுணருமான கே. சம்பத்குமாா், முதுநிலை நிபுணா் மருத்துவா் ஆண்ட்ரூ தீபக் ராஜீவ், மருத்துவ இயக்குநா் ரமேஷ் அா்த்தநாரி, மருத்துவ நிா்வாகி பி. கண்ணன், உளவியல் துறையின் தலைவரும், முதுநிலை மருத்துவ நிபுணருமான மருத்துவா் காா்த்திகேயன், குழந்தைகளுக்கான தீவிர சிகிச்சைப் பிரிவின் முதுநிலை மருத்துவ நிபுணா் செந்தில்குமாா் உள்ளிட்ட வெளிநாடு, வெளி மாநிலங்களைச் சோ்ந்த 250-க்கும் மேற்பட்ட மருத்துவா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.