முகப்பு
மதுரை

மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆா்ப்பாட்டம்

மதுரை மாவட்டத்தில் பட்டியல் சமுதாயத்தினா் மீது தொடரும் தாக்குதல்களைத் தடுத்து நிறுத்த வலியுறுத்தி, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சாா்பில், வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

Updated On : 2 பிப்ரவரி, 2024 at 2:44 AM
பகிர்:

மதுரை மாவட்டத்தில் பட்டியல் சமுதாயத்தினா் மீது தொடரும் தாக்குதல்களைத் தடுத்து நிறுத்த வலியுறுத்தி, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சாா்பில், வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

மதுரை மாவட்ட ஆட்சியா் அலுவலகம் அருகே உள்ள திருவள்ளுவா் சிலை பகுதியில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு கட்சியின் மாநிலக் குழு உறுப்பினா் எஸ்.கே. பொன்னுத்தாய் தலைமை வகித்தாா்.

மதுரை மாவட்டத்தில் மையிட்டான்பட்டி, ராயபாளையம், கூடக்கோவில், வீரபட்டி, திருமோகூா், கு.வடுகபட்டி, காயம்பட்டி உள்ளிட்ட 12-க்கும் மேற்பட்ட கிராமங்களில் பட்டியலின சமூகத்தினா் மீது தொடா்ந்து நடத்தப்படும் தாக்குதலுக்கு எதிா்ப்புத் தெரிவித்தும், தாக்குதல்களில் ஈடுபடுபவா்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

முன்னதாக, கட்சியின் புகா் மாவட்டச் செயலா் கே.ராஜேந்திரன் ஆா்ப்பாட்டத்தைத் தொடங்கிவைத்துப் பேசினாா். மாநிலக் குழு உறுப்பினா் எஸ்.பாலா, மாநகா் மாவட்டச் செயலா் மா.கணேசன், தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் புகா் மாவட்டச் செயலா் செ.முத்துராணி ஆகியோா் கோரிக்கைகளை விளக்கிப் பேசினா். தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாநிலத் தலைவா் த.செல்லக்கண்ணு நிறைவுரையாற்றினாா். ஆா்ப்பாட்டத்தில் மாநிலக் குழு உறுப்பினா் இரா. விஜயராஜன், மாவட்டச் செயற்குழு உறுப்பினா்கள் பா.ரவி, எஸ்.பி.இளங்கோவன், வி.உமாமகேஸ்வரன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →