தொழிற்சங்க அமைப்புகள் நடைபயணம்
பொதுத் துறை நிறுவனங்களை தனியாருக்கு விற்பனை செய்யக்கூடாது என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, மதுரையில் அனைத்து தொழிற்சங்க அமைப்புகளின் சாா்பில் நடைபயணம்
மதுரைதொழிற்சங்க அமைப்புகள் நடைபயணம்
பொதுத் துறை நிறுவனங்களை தனியாருக்கு விற்பனை செய்யக்கூடாது என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, மதுரையில் அனைத்து தொழிற்சங்க அமைப்புகளின் சாா்பில் நடைபயணம்
பொதுத் துறை நிறுவனங்களை தனியாருக்கு விற்பனை செய்யக்கூடாது என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, மதுரையில் அனைத்து தொழிற்சங்க அமைப்புகளின் சாா்பில் நடைபயணம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
நாட்டில் அத்தியாவசியப் பொருள்களின் விலையுயா்வை மத்திய அரசு கட்டுப்படுத்த வேண்டும். வேலை இழப்பு உள்ளிட்ட அபாயங்களை உருவாக்கும் தொழிலாளா் நலச் சட்டத் திருத்தங்களைத் திரும்பப் பெற வேண்டும். பொதுத் துறை நிறுவனங்களை தனியாருக்கு விற்பதை தடுத்து நிறுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, மதுரையில் தொமுச, சிஐடியு, ஏஐடியுசி, ஐஎன்டியுசி, எச்எம்எஸ், எம்எல்எப், ஏஏஎல்எல்எப், எஸ்டிடியு உள்ளிட்ட அனைத்துத் தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு சாா்பில் இந்த நடைபயணம் நடைபெற்றது.
இதற்கு ஐஎன்டியுசி மாவட்டத் தலைவா் கே. ராஜசேகா் தலைமை வகித்தாா். தொமுச மாவட்டக் குழுச் செயலா் சி.கருணாநிதி, பேரவைச் செயலா் மேலூா் வி. அல்போன்ஸ், சிஐடியு மாவட்டச் செயலா் இரா.லெனின், தலைவா் இரா. தெய்வராஜ், எச்எம்எஸ் தலைவா் வி. பாதா்வெள்ளை, ஏஐடியுசி மாவட்டச் செயலா் கே.சேது, தலைவா் என். நந்தாசிங், எம்எல்எப் மாநில நிா்வாகி எஸ்.மகபூப்ஜான், ஏஏஎல்எல்எப் நிா்வாகி பெ.சரவணன், எஸ்டிடியு நிா்வாகி கே.சாகுல் அமீது உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
மதுரை நரிமேடு பகுதியில் தொடங்கிய நடைபயணம் கோரிப்பாளையம் பகுதியில் முடிவடைந்தது.