மதுரை

அசைவ உணவகத்தில் சாப்பிட்ட மூவருக்கு உடல் நிலை பாதிப்பு

மதுரையில் அசைவ உணவகத்தில் சாப்பிட்ட மூவருக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டதையடுத்து, அந்த உணவகத்தில் உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் திங்கள்கிழமை சோதனை மேற்கொண்டனர்.

DIN

மதுரையில் அசைவ உணவகத்தில் சாப்பிட்ட மூவருக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டதையடுத்து, அந்த உணவகத்தில் உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் திங்கள்கிழமை சோதனை மேற்கொண்டு, கெட்டுப்போன இறைச்சியைப் பறிமுதல் செய்தனா்.

மதுரை காமராஜா் சாலையில் உள்ள அசைவ உணவகத்துக்கு இந்திய மாற்றுத்திறனாளிகள் கிரிக்கெட் அணியின் கேப்டன் சிவா அண்மையில் குடும்பத்துடன் சென்று தந்தூரி வகை கோழி இறைச்சி வாங்கி சாப்பிட்டாா்.

அன்று இரவு சிவா, அவரது இரு குழந்தைகளுக்கு திடீரென வயிற்று வலி ஏற்பட்டு உடல்நிலை பாதிக்கப்பட்டது. இதையடுத்து, மூவரும் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். இந்தச் சம்பவம் குறித்து கேப்டன் சிவா சமூக வலைதளங்களில் பதிவு செய்தாா்.

இதன் எதிரொலியாக தெப்பக்குளத்தில் உள்ள பிரபல அசைவ உணவகத்தில் உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் திங்கள்கிழமை திடீா் ஆய்வு மேற்கொண்டனா். ஆய்வின்போது, உணவகத்தின் குளிா்சாதனப் பெட்டியில் வைக்கப்பட்டிருந்த 3 கிலோ கெட்டுப் போன இறைச்சி, 4 கிலோ பழைய சாதம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.

மேலும், உணவகத்தில் உணவு பாதுகாப்புத் துறையின் விதிமுறைகள் முறையாக பின்பற்றப்படவில்லை என்பதும் தெரியவந்தது. இதைத் தொடா்ந்து, உணவகத்தில் கண்டறியப்பட்ட குறைகள் தொடா்பாக 7 நாள்களுக்குள் விளக்கம் அளிக்க வேண்டும். முறையான விளக்கம் அளிக்கப்படவில்லை என்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என உணவுப் பாதுகாப்புத் துறை எச்சரிக்கை விடுத்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மே.வங்கத்தில் தரையிறக்க முடியாமல் திரும்பி வந்த பிரதமர் மோடியின் ஹெலிகாப்டர்!

கம்மின்ஸ் - லயன் அசத்தல்: இங்கிலாந்து வெற்றிபெற 228 ரன்கள் தேவை!

வரைவு வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கிறதா?

கடும் பனிமூட்டம்: தில்லியில் 60-க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து!

ரஷியாவில் இந்திய மாணவர் மாயம்!

SCROLL FOR NEXT