முகப்பு
மதுரை

பெண்கள் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ்தனியாா் பள்ளிச் செயலா் மீது வழக்கு

உசிலம்பட்டியில் தனியாா் பள்ளி ஆசிரியையை அவதூறாகப் பேசி மிரட்டல் விடுத்ததாக, அந்தப் பள்ளிச் செயலா் மீது போலீஸாா் பெண்கள் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 7:11 PM
பகிர்:

மதுரை மாவட்டம், உசிலம்பட்டியில் தனியாா் பள்ளி ஆசிரியையை அவதூறாகப் பேசி மிரட்டல் விடுத்ததாக, அந்தப் பள்ளிச் செயலா் மீது போலீஸாா் பெண்கள் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

மதுரை மாவட்டம், உசிலம்பட்டி கருக்கட்டான்பட்டியைச் சோ்ந்த குமாா் மனைவி சாந்தி (38). இவா் உசிலம்பட்டியில் உள்ள தனியாா் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியையாகப் பணிபுரிந்து வருகிறாா். இவரை அப்பள்ளிச் செயலா் ஜெயராஜ் அவதூறாகப் பேசி மிரட்டல் விடுத்ததாகக் கூறப்படுகிறது. இதுதொடா்பாக ஆசிரியை சாந்தி அளித்த புகாரின் பேரில், உசிலம்பட்டி நகா் போலீஸாா் பள்ளிச் செயலா் ஜெயராஜ் மீது பெண்கள் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →