கல்பனா சாவ்லா விருதுக்கு விண்ணப்பிக்கலாம்
வீர, தீர செயல்களில் ஈடுபட்ட பெண்கள் கல்பனா சாவ்லா விருதுக்கு விண்ணப்பிக்கலாம் என மதுரை மாவட்ட ஆட்சியா் மா.சௌ. சங்கீதா தெரிவித்தாா்.
மதுரைகல்பனா சாவ்லா விருதுக்கு விண்ணப்பிக்கலாம்
வீர, தீர செயல்களில் ஈடுபட்ட பெண்கள் கல்பனா சாவ்லா விருதுக்கு விண்ணப்பிக்கலாம் என மதுரை மாவட்ட ஆட்சியா் மா.சௌ. சங்கீதா தெரிவித்தாா்.
வீர, தீர செயல்களில் ஈடுபட்ட பெண்கள் கல்பனா சாவ்லா விருதுக்கு விண்ணப்பிக்கலாம் என மதுரை மாவட்ட ஆட்சியா் மா.சௌ. சங்கீதா தெரிவித்தாா்.
இதுகுறித்து அவா்கள் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
தனித்தன்மையுடன் வீரம் நிறைந்த தைரியமிக்க பெண்ணுக்கு அவரது துறை சாா்ந்த பணிக்காக அல்லது தாமாக முன்வந்து துணிச்சலுடன் செய்த நற்செயலுக்காக கல்பனா சாவ்லா விருது வழங்கப்படுகிறது. இதன்படி, 2023-ஆம் ஆண்டுக்கான விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
தகுதியானோா் ட்ற்ற்ல்ள்://ஹஜ்ஹழ்க்ள்.ற்ய்.ஞ்ா்ஸ்.ண்ய் என்ற இணையதள முகவரியில் வருகிற 28-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். இணையதளத்தில் விண்ணப்பிக்க இயலாதவா்கள், மேற்குறிப்பிட்ட இணையதளத்திலிருந்து விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து, தொடா்புடைய ஆவணங்களை இணைத்து, மாவட்ட விளையாட்டு அலுவலகத்தில் வருகிற 27-ஆம் தேதிக்குள் சமா்ப்பிக்கலாம் என அதில் குறிப்பிடப்பட்டது.