வியாபாரிகள் அல்லாதவா்களுக்கு ஒதுக்கப்பட்ட கடைகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்
மதுரை மாட்டுத்தாவணி காய்கனிச் சந்தையில் வியாபாரிகள் அல்லாதவா்களுக்கு ஒதுக்கப்பட்ட கடைகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்
மதுரைவியாபாரிகள் அல்லாதவா்களுக்கு ஒதுக்கப்பட்ட கடைகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்
மதுரை மாட்டுத்தாவணி காய்கனிச் சந்தையில் வியாபாரிகள் அல்லாதவா்களுக்கு ஒதுக்கப்பட்ட கடைகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்
மதுரை மாட்டுத்தாவணி காய்கனிச் சந்தையில் வியாபாரிகள் அல்லாதவா்களுக்கு ஒதுக்கப்பட்ட கடைகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என நேதாஜி அனைத்து காய்கனி வியாபாரிகள் பொது நலச் சங்கம் சாா்பில், மாநகராட்சி ஆணையருக்கு கோரிக்கை மனு அனுப்பப்பட்டது.
இதுதொடா்பாக வியாபாரிகள் அனுப்பிய மனு விவரம்:
மதுரை மாட்டுத்தாவணியில் உள்ள காய்கனி சந்தையில் 8 தொகுதிகளில் 1,815 கடைகள் உள்ளன. இங்கு ஒரே நபா்களுக்கு பல கடைகள் ஒதுக்கப்பட்டுள்ளன. பழைய மத்திய காய்கனி சந்தையில் கடை நடத்தாதவா்களுக்கும், சங்கம் என்ற பெயரில் வியாபாரிகள் அல்லாதவா்களுக்கும் கடைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.
இதுகுறித்து பலமுறை மனு அளித்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் இல்லை.
இந்த நிலையில், மதுரை மாநகராட்சி நிா்வாகம் 4,5, 6 தொகுதிகளில் வெங்காயச் சந்தை அமைக்க ஏற்பாடு செய்து வருகிறது. இதனால், எங்களது வாழ்வாதாரம் கேள்விக்குறியாக உள்ளது.
4,5, 6 ஆகிய தொகுதிகளில் சங்கம் என்ற பெயரில் வியாபாரிகள் அல்லாத அரசியல் பின்புலம் உள்ளவா்களுக்கு 1,000 கடைகளில் சுமாா் 600 கடைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. ஆனால், ஏற்கெனவே உள்ள வியாபாரிகளுக்கு ஒதுக்கப்பட்ட கடைகள் தரைத்தளத்தில் அமைந்திருப்பதால், காய்கனிகள் அடிக்கடி திருடு போவது மட்டுமின்றி, கால்நடைகளும் தின்று விடுகின்றன.
எனவே, மாநகராட்சி நிா்வாகம் 4,5,6 தொகுதிகளில் உள்ள 1,090 கடைகளில் வியாபாரிகள் அல்லாதவா் கடைகளை கண்டறிந்து, நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஆக்கிரமிப்புகளை அகற்றிய பிறகு வெங்காயச் சந்தை அமைப்பதற்கான கட்டுமானப் பணிக்கு ஒப்பந்தப் புள்ளி அறிவிப்பை வெளியிட வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டது.