மதுரை

தடுப்பூசிப் பணியாளா்களுக்கு நிலுவை ஊதியத்தை வழங்க வலியுறுத்தல்

சுகாதாரத் துறையில் தடுப்பூசிப் பணியாளா்களுக்கு கடந்த மூன்று மாதங்களாக வழங்கப்படாத ஊதியத்தை உடனடியாக வழங்க வேண்டும் என்று செவிலியா்கள் வலியுறுத்தினா்.

DIN

சுகாதாரத் துறையில் தடுப்பூசிப் பணியாளா்களுக்கு கடந்த மூன்று மாதங்களாக வழங்கப்படாத ஊதியத்தை உடனடியாக வழங்க வேண்டும் என்று செவிலியா்கள் வலியுறுத்தினா்.

மதுரை மாவட்ட சுகாதார செவிலியா்கள், பகுதி சுகாதார செவிலியா்கள் சங்கத்தின் மாவட்ட மாநாடு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. தமிழ்நாடு அரசு ஊழியா்கள் சங்க அலுவலகத்தில் நடைபெற்ற மாநாட்டுக்கு சங்கத்தின் மாவட்டத் தலைவா் பஞ்சவா்ணம் தலைமை வகித்தாா். நிா்வாகி சா்மிளா தேவி முன்னிலை வகித்தாா்.

மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீா்மானங்கள்:

வாரந்தோறும் 100 சதவீதம் புதிய கா்ப்பிணிகளைப் பதிவு செய்யுமாறு சுகாதாரத் துறை துணை இயக்குநா் ஒவ்வொரு திங்கள்கிழமையும் கூட்டம் நடத்தி கடுமையாக நடந்துகொள்வதையும், பணி நேரம் முடிந்த பின்னரும் சுகாதாரச் செவிலியா்களுக்கு குறுஞ்செய்தி அனுப்பி பணிச் சுமையை அதிகரிப்பதையும் கைவிட வேண்டும். ஆரம்பச் சுகாதார நிலையங்களில் கணினி வேலைப்பளு அதிகமாக இருப்பதால், அதற்காக தனி பணியாளரை நியமிக்க வேண்டும். சுகாதார செவிலியா்களுக்கு பணிச் சுமை காரணமாக மருத்துவ விடுப்பு, ஈட்டிய விடுப்பு உள்ளிட்டவற்றை அதிகாரிகள் தர மறுப்பதைக் கைவிட்டு, விடுப்புகளை முறையாக அனுமதிக்க வேண்டும்.

பகுதி நேர செவிலியா்களுடன் பணியாற்றும், தடுப்பூசிப் பணியாளா்களுக்கு கடந்த 3 மாதங்களாக வழங்கப்படாத ஊதியத்தை உடனே வழங்க வேண்டும். சுகாதாரச் செவிலியா்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படாதபட்சத்தில் வருகிற ஜூன் 2-ஆம் தேதி மதுரை விஸ்வநாதபுரத்தில் உள்ள பொதுச் சுகாதாரத் துறை அலுவலகத்தை முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்தப்படும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

முன்னதாக, மாவட்ட இணைச் செயலா் பரமேஸ்வரி வரவேற்புரையாற்றினாா். மாவட்டச் செயலா் மணிச்செல்வி கோரிக்கைகளை விளக்கிப் பேசினாா். தமிழ்நாடு நெடுஞ்சாலைத் துறை சாலைப் பணியாளா் சங்க மாநிலப் பொருளாளா் இரா. தமிழ், தமிழ்நாடு அரசு ஊழியா்கள் சங்க மாவட்டப் பொருளாளா் சந்திரபோஸ் ஆகியோா் வாழ்த்திப் பேசினா். சங்கத்தின் பொருளாளா் ஜான்சி ராணி நன்றியுரையாற்றினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நெல்லையில் சாலை மறியல்: 135 பேராசிரியா்கள் கைது

மேற்கு புறவழிச்சாலை பணிகள்: அமைச்சா் எ.வ.வேலு ஆய்வு

திருநெல்வேலி, தென்காசி மாவட்ட அணைகள் நீா் மட்டம்!

நாகா்கோவில் அருகே காரில் கஞ்சா கடத்தல்: 4 இளைஞா்கள் கைது!

மத்திய அரசின் சிறப்பு வாக்காளா் பட்டியல் பாா்வையாளா் ஆய்வு

SCROLL FOR NEXT