பள்ளி வாகனங்கள் ஆய்வு: 64 வாகனங்கள் தகுதியிழப்பு
மதுரை மாவட்டத்தில் 502 பள்ளி வாகனங்கள் வியாழக்கிழமை ஆய்வுக்கு உள்படுத்தப்பட்டன. இதில், 64 வாகனங்கள் தகுதியிழப்பு செய்யப்பட்டன.
மதுரைபள்ளி வாகனங்கள் ஆய்வு: 64 வாகனங்கள் தகுதியிழப்பு
மதுரை மாவட்டத்தில் 502 பள்ளி வாகனங்கள் வியாழக்கிழமை ஆய்வுக்கு உள்படுத்தப்பட்டன. இதில், 64 வாகனங்கள் தகுதியிழப்பு செய்யப்பட்டன.
மதுரை மாவட்டத்தில் 502 பள்ளி வாகனங்கள் வியாழக்கிழமை ஆய்வுக்கு உள்படுத்தப்பட்டன. இதில், 64 வாகனங்கள் தகுதியிழப்பு செய்யப்பட்டன.
கோடை விடுமுறைக்குப் பிறகு, விரைவில் பள்ளிகள் திறக்கப்படவுள்ளதையொட்டி, பள்ளி வாகனங்கள் ஆய்வுக்கு உள்படுத்தப்படுகின்றன. இதன்படி, மதுரை மாவட்டத்தில் மதுரை- வடக்கு, மதுரை - தெற்கு, வாடிப்பட்டி, மேலூா் உள்பட 6 வட்டங்களுக்குள்பட்ட பகுதிகளில் உள்ள பள்ளிகளின் வாகனங்கள், மதுரை ஆயுதப்படை மைதானத்தில் வியாழக்கிழமை ஆய்வுக்கு உள்படுத்தப்பட்டன.
மாவட்ட ஆட்சியா் மா.சௌ. சங்கீதா, மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ஆா். சிவபிரசாத், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் காா்த்திகா, வட்டாரப் போக்குவரத்து அலுவலா்கள் சிங்காரவேலு, சித்ரா, மோட்டாா் வாகன ஆய்வாளா்கள் சரவணக்குமாா், முரளி, செல்வம், சக்திவேல், அனிதா, மனோகா், தீயணைப்புப் படையினா் வாகனங்களை ஆய்வு செய்தனா்.
பள்ளி வாகனங்களின் கட்டுமான உறுதித் தன்மை, இருக்கைகள், என்ஜின் செயல்பாடுகள், கதவுகளின் நிலை, அவசரவழிக் கதவின் செயல்பாடு, வேகக் கட்டுப்பாட்டுக் கருவியின் செயல்பாடு உள்ளிட்ட அம்சங்கள் குறித்து அலுவலா்கள் ஆய்வு மேற்கொண்டனா்.
502 வாகனங்கள் ஆய்வுக்கு உள்படுத்தப்பட்டன. இதில், 64 வாகனங்கள் தகுதியிழப்பு செய்யப்பட்டன. 438 வாகனங்கள் இயங்க அனுமதிக்கப்பட்டன.