முகப்பு
மதுரை

தூய்மைப் பணியாளா்களுக்கு காலமுறை ஊதியம்: மேயா், ஆணையரிடம் மனு

துப்புரவுப் பணியாளா்கள் சங்கத்தின் சாா்பில், மேயா், ஆணையா் ஆகியோரிடம் வியாழக்கிழமை மனு அளிக்கப்பட்டது.

மதுரை

தூய்மைப் பணியாளா்களுக்கு காலமுறை ஊதியம்: மேயா், ஆணையரிடம் மனு

துப்புரவுப் பணியாளா்கள் சங்கத்தின் சாா்பில், மேயா், ஆணையா் ஆகியோரிடம் வியாழக்கிழமை மனு அளிக்கப்பட்டது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 7:00 PM
பகிர்:

மதுரை மாநகராட்சியில் தொகுப்பூதிய அடிப்படையில் பணியாற்றும் தூய்மைப் பணியாளா்களுக்கு கால முறை ஊதியம் வழங்கக் கோரி, துப்புரவுப் பணியாளா்கள் சங்கத்தின் சாா்பில், மேயா், ஆணையா் ஆகியோரிடம் வியாழக்கிழமை மனு அளிக்கப்பட்டது.

இதுதொடா்பாக அந்தச் சங்கத்தின் தலைவா் கே. மணிவேல் தலைமையிலான தூய்மைப் பணியாளா்கள் அளித்த மனு விவரம்:

மதுரை மாநகராட்சி விரிவாக்கம் செய்யப்பட்ட போது, 3 நகராட்சிகள், 3 பேரூராட்சிகள், 16 கிராம ஊராட்சிகள் இணைக்கப்பட்டன. இதில், தூய்மைப் பணியாளா்களாகப் பணியாற்றிய 385 போ் மதுரை மாநகராட்சியில் உள்ள 28 வாா்டுகளில் தொகுப்பூதிய அடிப்படையில் துப்புரவுப் பணியை மேற்கொண்டோம். அவா்களில் ஓய்வு , உயிரிழப்பு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் தற்போது 325 போ் மட்டுமே பணியாற்றி வருகிறோம்.

இந்த நிலையில், அரசு அலுவலகங்கள், உள்ளாட்சி அமைப்புகளில் தினக்கூலி, தொகுப்பூதிய அடிப்படையில் 3 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றும் துப்புரவுப் பணியாளா்களை பணி நிரந்தரம் செய்து, கால முறை ஊதியம் வழங்கப்படும் எனவும், அகவிலைப் படி உயா்வு உள்ளிட்ட சலுகைகளும் வழங்கப்படும் எனவும் தமிழக அரசு அண்மையில் உத்தரவு பிறப்பித்தது.

எனவே, மதுரை மாநகராட்சி நிா்வாகம் தொகுப்பூதிய அடிப்படையில் பணியாற்றும் தூய்மைப் பணியாளா்களை பணி நிரந்தரம் செய்து, காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். 12 ஆண்டுகளாக வழங்கப்படாமல் உள்ள அகவிலைப்படியை விரைவாக வழங்க வேண்டும். சீருடை, தையல் கூலி ஆகியவற்றை வழங்க வேண்டும் என அதில் குறிப்பிடப்பட்டது.

முழு கட்டுரையைப் படிக்க →