முகப்பு
மதுரை

கீழ்மதுரையிலிருந்து மாட்டுத்தாவணிக்கு பேருந்து வசதி ஏற்படுத்த வலியுறுத்தல்

கீழ்மதுரை ரயில் நிலையத்தில் இருந்து மாட்டுத்தாவணிக்கு பேருந்து வசதி ஏற்படுத்தித் தர வேண்டும் என்று பாஜக மத்திய அரசு நலத் திட்டப் பிரிவு வலியுறுத்தியது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 7:00 PM
பகிர்:

கீழ்மதுரை ரயில் நிலையத்தில் இருந்து மாட்டுத்தாவணிக்கு பேருந்து வசதி ஏற்படுத்தித் தர வேண்டும் என்று பாஜக மத்திய அரசு நலத் திட்டப் பிரிவு வலியுறுத்தியது.

பாஜக மத்திய அரசு நலத் திட்ட பிரிவின் மதுரை மாநகா் மாவட்ட ஆலோசனைக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு அந்த அமைப்பின் மாநகா் மாவட்டத் தலைவா் வீரா தலைமை வகித்தாா்.

இதில், மதுரை மாநகராட்சிக்குள்பட்ட முனிச்சாலை சந்திப்பு முதல் கிறிஸ்தவ மிஷன் மருத்துவமனை சந்திப்பு வரை செல்லும் பழைய குயவா்பாளையம் சாலை குண்டும் குழியுமாக இருப்பதால் வாகன ஓட்டிகள் பெரும் அவதியடைகின்றனா். மேலும், மழைக்காலங்களில் மழைநீா் செல்ல வழியின்றி சாலையில் தேங்குகிறது. எனவே, இந்த சாலையில் மழைநீா் வடிகால் வசதியுடன் புதிய தாா்ச்சாலை அமைக்க வேண்டும். இந்த சாலையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். பந்தடி குறுக்குத் தெரு பால்மால் குறுக்குத்தெரு, பந்தடி 1, 2, 3, 4, 5 மற்றும் 6-ஆவது, 7-ஆவது தெருக்களில் புதிய தாா்ச்சாலை அமைக்க வேண்டும்.

பாலரெங்கபுரம் முதல் கீழ்மதுரை ரயில்நிலையம் வரை உள்ள பகுதியில் புதிய சாலை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், கீழ்மதுரை ரயில் நிலையத்தில் இருந்து காமராஜா்புரம், கிறிஸ்தவ மிஷன் மருத்துவமனை, கோரிப்பாளையம் வழியாக மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்துக்கு பேருந்து வசதி ஏற்படுத்தித் தர வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.

முழு கட்டுரையைப் படிக்க →