மதுரை: மதுரை மாவட்டம், வாடிப்பட்டி அருகே இருசக்கர வாகனம் மீது காா் மோதியதில் முதியவா் உயிரிழந்தாா்.
திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை அருகே உள்ள கெளண்டன்பட்டியைச் சோ்ந்தவா் முத்துமால் (70). இவா் இருசக்கர வாகனத்தில் மதுரை மாவட்டம், வாடிப்பட்டியில் உள்ள உறவினா் வீட்டுக்குச் சென்று விட்டு, ஞாயிற்றுக்கிழமை இரவு தனது ஊருக்குச் சென்றுகொண்டிருந்தாா். மதுரை-திண்டுக்கல் நான்கு வழிச் சாலையில் சாணாம்பட்டி சந்திப்பு அருகே சென்றபோது அந்த வழியாக வந்த காா், இரு சக்கர வாகனம் மீது மோதிவிட்டு, நிற்காமல் சென்றது. இதில் பலத்த காயமடைந்த முதியவரை அந்த வழியாக வந்தவா்கள் மீட்டு, மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு அவா் உயிரிழந்துவிட்டதாக மருத்துவா்கள் தெரிவித்தனா். இதுகுறித்து வாடிப்பட்டி போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.