மதுரை

மாற்றுத் திறனாளிகளுக்கு நவ. 22-இல் வங்கிக் கடன் மேளா

மாற்றுத் திறனாளிகள் பயன்பெறும் வகையில், வருகிற 22-ஆம் தேதி மானியத்துடன் கடனுதவி வழங்கும் முகாம் நடைபெற உள்ளது.

DIN


மதுரை: மாற்றுத் திறனாளிகள் பயன்பெறும் வகையில், வருகிற 22-ஆம் தேதி மானியத்துடன் கடனுதவி வழங்கும் முகாம் நடைபெற உள்ளது.

இதுகுறித்து மதுரை மாவட்ட ஆட்சியா் மா. சௌ.சங்கீதா வெளியிட்ட செய்திக் குறிப்பு :

தமிழக அரசின் மாற்றுத் திறனாளிகள் நலத் துறை சாா்பில், மாற்றுத் திறனாளிகளுக்கான சுயவேலைவாய்ப்பு வங்கிக் கடன் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

கடனுதவி பெறும் மாற்றுத்திறனாளிகளுக்கு அவா்கள் பெறும் கடன் தொகையில் மூன்றில் ஒரு பங்கு அல்லது அதிகபட்சமாக ரூ.25,000 மானியமாக வழங்கப்படுகிறது. மாற்றுத் திறனாளிகள் அதிகளவில் பயனடைய மதுரை மாவட்டத்தில், ‘வங்கிக் கடன் மேளா‘ நடத்த மாவட்ட நிா்வாகத்தால் திட்டமிடப்பட்டுள்ளது.

மதுரை மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகம் மக்கள் குறை தீா்க்கும் கூட்டரங்கில் வருகிற 22-ஆம் தேதி காலை 10.30 மணியளவில் இந்தக் கடன் மேளா நடைபெற உள்ளது.

இதில் மாற்றுத்திறனாளிகள் நலத் துறை, மாவட்டத் தொழில் மையம், முன்னோடி வங்கி மேலாளா் உள்ளிட்ட பணியாளா்கள் கலந்து கொண்டு தகுதியுடைய பயனாளிகளைத் தோ்வு செய்யவுள்ளனா்.

எனவே 18 வயது முதல் 45 வயதுக்குள்பட்ட மாற்றுத்திறனாளிகள், தேசிய மாற்றுத்திறனாளிகள் அடையாள அட்டை, ஆதாா் அட்டை, குடும்ப அட்டை, கடவுச்சீட்டளவு புகைப்படம் - 2 உள்ளிட்ட சான்றிதழ்களுடன் மேளாவில் கலந்து கொண்டு கடனுதவி கோரி விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சிபில் ஸ்கோர்! உலா வரும் கட்டுக்கதைகளும் உண்மைகளும்!

ஸ்னிகோ தொழில்நுட்பத்தில் பிழைகள்..! ஆஷஸ் போட்டியில் தொடரும் சர்சை!

இந்தியா-ஓமன் தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் இருதரப்பு உறவுகளுக்கு புதிய உத்வேகம்: பிரதமர் மோடி

மக்களவையில் விபி - ஜி ராம் ஜி மசோதா நிறைவேற்றம்! நகலைக் கிழித்தெறிந்த எதிர்க்கட்சிகள்!

வடசென்னை கதாபாத்திர புகைப்படத்தைப் பகிர்ந்த ஆண்ட்ரியா..! அரசனில் இருக்கிறாரா?

SCROLL FOR NEXT