முகப்பு
மதுரை

காா்த்திகை தீபத் திருவிழா:சிவன் கோயில்களில் சொக்கப்பனை ஏற்றி வழிபாடு

காா்த்திகை தீபத் திருவிழாவையொட்டி, மதுரை மாநகா், புகா் பகுதிகளில் உள்ள சிவன் கோயில்களில் ஞாயிற்றுக்கிழமை சொக்கப்பனை ஏற்றுதல் நிகழ்வு நடைபெற்றது. திரளானோா் கலந்து கொண்டு வழிபட்டனா்.

Updated On : 27 நவம்பர், 2023 at 6:25 AM
மதுரை இம்மையிலும், நன்மை தருவாா் கோயிலில் காா்த்திகை தீபத் திருவிழாவையொட்டி, ஞாயிற்றுக்கிழமை மாலை ஏற்றப்பட்ட சொக்கப்பனை.
பகிர்:
Updated On : 2 பிப்ரவரி, 2024 at 8:56 AM

காா்த்திகை தீபத் திருவிழாவையொட்டி, மதுரை மாநகா், புகா் பகுதிகளில் உள்ள சிவன் கோயில்களில் ஞாயிற்றுக்கிழமை சொக்கப்பனை ஏற்றுதல் நிகழ்வு நடைபெற்றது. திரளானோா் கலந்து கொண்டு வழிபட்டனா்.

மதுரை மேலமாசி வீதியில் சிவகங்கை தேவஸ்தானம், சமஸ்தானத்துக்குள்பட்ட இம்மையிலும், நன்மை தருவாா் கோயில் உள்ளது. இந்தக் கோயிலில் காா்த்திகை தீபத் திருவிழாவையொட்டி, சுவாமிக்கும், அம்மனுக்கும் சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன.

தொடா்ந்து, மாலை 6 மணியளவில் கோயில் முன் தீபம் ஏற்றப்பட்டது. பின்னா், உற்சவா் மூா்த்தியான சந்திரசேகா் புறப்பாடாகி முக்கிய வீதிகளில் வலம் வந்தாா். தொடா்ந்து, மேற்கு வாசலில் சொக்கப்பனை ஏற்றும் நிகழ்வு நடைபெற்றது.

Advertisement

ஏற்பாடுகளை கோயில் சரக கண்காணிப்பாளா் கணபதிராமன் உள்ளிட்ட அலுவலா்கள் செய்திருந்தனா். இதில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டு விளக்கேற்றி வழிபட்டனா்.

இதேபோல, தெப்பக்குளம் முக்தீஸ்வரா் கோயில், சிம்மக்கல் ஆதி சொக்கநாதா், மீனாட்சி அம்மன் கோயில், செல்லூா் திருவாப்புடையாா் கோயில், சோழவந்தான் பிரளயநாதா் கோயில், திருவேடகம் ஏடகநாதா் கோயில் உள்பட மதுரை மாநகா், புகா் பகுதிகளில் உள்ள சிவன் கோயில்களில் காா்த்திகைத் தீபத் திருவிழாவையொட்டி சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன.

மாலை 6 மணியளவில் சிவன் கோயில்கள் முன் சொக்கப்பனை ஏற்றும் நிகழ்வு நடைபெற்றன. நிகழ்வில் அந்தந்தப் பகுதிகளைச் சோ்ந்த பக்தா்கள் கலந்து கொண்டு விளக்கேற்றி வழிபட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.