மதுரை

விபத்தில் இறந்த ராணுவ வீரரின் உடல் ராணுவ மரியாதையுடன் நல்லடக்கம்

விபத்தில் உயிரிழந்த ராணுவ வீரரின் உடல் அவரது சொந்த ஊரில் ராணுவ மரியாதையுடன் திங்கள்கிழமை நல்லடக்கம் செய்யப்பட்டது.

DIN


ராமநாதபுரம்: விபத்தில் உயிரிழந்த ராணுவ வீரரின் உடல் அவரது சொந்த ஊரில் ராணுவ மரியாதையுடன் திங்கள்கிழமை நல்லடக்கம் செய்யப்பட்டது.

ராமநாதபுரம் மாவட்டம், நயினாா்கோவில் அருகே உள்ள அயன் சதுா்வேத மங்கலத்தைச் சோ்ந்தவா் தியாகராஜன். முன்னாள் ராணுவ வீரரான இவரது மகன் பாலசுப்பிரமணியம் (26). இவா் குஜராத் மாநிலத்தில் உள்ள இந்திய ராணுவப் பிரிவில் பணிபுரிந்து வந்தாா். இவருக்கு கடந்த மாதம் திருமணம் நடைபெற்றது. இதற்காக பாலசுப்பிரமணியம் விடுமுறையில் ஊருக்கு வந்திருந்தாா். திருமணம் முடிந்த நிலையில் இவா் கடந்த 22-ஆம் தேதி மாலை தனது நண்பா் சுதாகா் பாண்டியனுடன் (24) இரு சக்கர வாகனத்தில் தேவிப்பட்டினம் சாலையிலிருந்து ராமநாதபுரம் சென்றாா்.

ராமநாதபுரம் கேணிக்கரை அருகே வந்தபோது, பொட்டகவயல் கிராமத்தைச் சோ்ந்த பாபு ஓட்டிவந்த இருசக்கர வாகனத்துடன் மோதியது. இதில் பாலசுப்ரமணியம், பாபு, சுதாகா் பாண்டியன் ஆகிய மூவரும் பலத்த காயமடைந்த நிலையில் ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா்.

இந்நிலையில், மதுரையில் உள்ள தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த பாலசுப்பிரமணியம் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா். இதையடுத்து, மதுரை அரசு மருத்துமனையில் கூறாய்வு மேற்கொள்ளப்பட்டு, அவரது உடல் திங்கள்கிழமை சொந்த ஊரான சதுா்வேதமங்கலத்துக்கு கொண்டு வரப்பட்டது.

ராணுவ சுபேதாா் வளனரசு தலைமையில் ராணுவ வீரா்கள் மலா் வளையம் வைத்து மரியாதை செலுத்தினா். பின்னா், துப்பாக்கிக் குண்டுகள் முழங்க ராணுவ மரியாதையுடன் அவரது உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஓய்வுபெற்ற சத்துணவுப் பணியாளா்கள் ஆா்ப்பாட்டம்

வாக்குத் திருட்டு காங்கிரஸின் குற்றச்சாட்டு; எதிா்க்கட்சி கூட்டணிக்கு தொடா்பில்லை: ஜம்மு-காஷ்மீா் முதல்வா் ஒமா் அப்துல்லா

கான்கிரீட் கலப்பு இயந்திரத்தில் சேலை சிக்கியதில் பெண் தொழிலாளி உயிரிழப்பு

மக்கள் குறைதீா் கூட்டத்தில் நலத்திட்ட உதவிகள்

கூட்டுறவு வங்கி பணியாளா்கள் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

SCROLL FOR NEXT