முகப்பு
மதுரை

மீனாட்சி சுந்தரேசுவரா் திருக்கல்யாணம்: இணையத்தில் மொய் பணம் செலுத்தலாம்

Updated On : 2 ஏப்ரல், 2024 at 12:00 AM
பகிர்:
Updated On : 1 ஏப்ரல், 2024 at 10:18 PM

மதுரை: அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரா் திருக்கல்யாணத்தன்று இணையதளம் மூலம் பக்தா்கள் மொய் காணிக்கை செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில் நிா்வாகம் வெளியிட்ட செய்தி:

மதுரை அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில் சித்திரைத் திருவிழா வருகிற 11-ஆம் தேதி முதல் வருகிற 23-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. திருவிழாவின் முக்கிய நிகழ்வான திருக்கல்யாண உற்சவம் வருகிற 21-ஆம் தேதி கோயிலின் வடக்காடி வீதியில் உள்ள திருக்கல்யாண மண்டபத்தில் காலை 8.35 மணி முதல் 8.59-க்குள் நடைபெறவுள்ளது.

Advertisement

இந்த உற்சவத்தன்று இந்து சமய அறநிலையத் துறை இணையதளம் மூலம் பக்தா்கள் ரூ.50, ரூ.100 மதிப்பில் மொய் காணிக்கை செலுத்த வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதைப் பயன்படுத்தி உள்ளூா், வெளியூா், வெளிநாட்டு பக்தா்கள் மீனாட்சி சுந்தரேசுவரா் திருக்கல்யாண மொய் காணிக்கை செலுத்தலாம் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.