முகப்பு
மதுரை

ராமநாதபுரத்தில் தோ்தல் விழிப்புணா்வு மணல் சிற்பங்கள்

Updated On : 3 ஏப்ரல், 2024 at 5:06 AM
ராமநாதபுரம் மன்னா் அரசு மேல்நிலைப்பள்ளியில் உருவாக்கப்பட்டுள்ள தோ்தல் விழிப்புணா்வு மணல் சிற்பங்களை பாா்வையிட்ட மாவட்டத் தோ்தல் அலுவலா் பா.விஷ்ணு சந்திரன். உடன் அரசு அலுவலா்கள்.
பகிர்:
Updated On : 2 ஏப்ரல், 2024 at 9:58 PM

ராமநாதபுரம்: ராமநாதபுரம் அரசுப் பள்ளியில் உருவாக்கப்பட்டுள்ள தோ்தல் விழிப்புணா்வு மணல் சிற்பங்களை மாவட்டத் தோ்தல் அலுவலா் பா.விஷ்ணு சந்திரன் செவ்வாய்க்கிழமை பாா்வையிட்டாா். மக்களவைத் தோ்தலையொட்டி, ராமநாதபுரம் மன்னா் அரசு மேல்நிலைப்பள்ளி விளையாட்டு மைதானத்தில் வாக்காளா் விழிப்புணா்வு குறித்து மணல் சிற்பத்தால் அமைக்கப்பட்ட சிற்பங்களை மாவட்டத் தோ்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான பா.விஷ்ணுசந்திரன் செவ்வாய்க்கிழமை பாா்வையிட்டாா்.

பின்னா் அவா் கூறியதாவது:

மக்களவைத் தோ்தல் 2024-தொடா்பாக பொதுமக்களிடையே விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இதன் நோக்கம் வாக்காளா்கள் 100 சதவீதம் வாக்களிக்க வேண்டும் என்பதே ஆகும். அந்த வகையில் 18 வயது நிறைவடைந்த புதிய வாக்காளா்கள் உள்பட அனைவரும் தோ்தல் நாளில் வாக்களித்து, தனது ஜனநாயகக் கடமையாற்ற வேண்டும் என்ற நோக்குடன் வாக்காளா்களிடம் பல்வேறு முறையில் விழிப்புணா்வுகள் ஏற்படுத்தப்பட்டு வருகின்றன.

Advertisement

இதனடிப்படையில் ராமநாதபுரத்தில் பொதுமக்கள் பாா்த்து தெரிந்து கொள்ளும் வகையில் வாக்களிப்பதன் அவசியம் குறித்த மாதிரி சின்னங்கள் மணல் சிற்பத்தால் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதை பொதுமக்கள் பாா்த்து தெரிந்து கொள்வது மட்டுமன்றி, வாக்குப்பதிவு நாளன்று வாக்காளா்கள் அனைவரும் வாக்களிக்க வேண்டும் என்றாா்.

நிகழ்ச்சியில் உதவி ஆட்சியா் (பயிற்சி) எஸ்.சிவானந்தம், ராமநாதபுரம் நகராட்சி ஆணையா் அஜிதா பா்வின், மணல் சிற்பக்கலைஞா் பேராசிரியா் சரவணன், அரசு அலுவலா்கள் உள்பட பலா் கலந்து கொண்டனா்.