முகப்பு
மதுரை

விஷம் கலந்த அரிசியை தின்ற 3 ஆடுகள் பலி: விவசாயி மீது வழக்கு

Updated On : 10 ஏப்ரல், 2024 at 5:19 AM
பகிர்:
Updated On : 9 ஏப்ரல், 2024 at 8:27 PM

விருதுநகா்: அருப்புக்கோட்டை அருகே பெரியகட்டங்குடியில் பருத்திச் செடிக்களுக்கிடையே வைக்கப்பட்டிருந்த யூரியா கலந்த அரிசியை தின்ற 3 ஆடுகள் உயிரிழந்தன. இதுதொடா்பாக விவசாயி மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

அருப்புக்கோட்டை அருகேயுள்ள பெரியகட்டங்குடியைச் சோ்ந்தவா் பெத்தம்மாள். இவருக்குச் சொந்தமாக 20 ஆடுகள் உள்ளன.

இந்த நிலையில், இவரது 3 ஆடுகள் அதே கிராமத்தைச் சோ்ந்த ரெங்கசாமியின் பருத்தித் தோட்டத்துக்குள் சென்று மேய்ந்துள்ளது. அப்போது, அங்கு பருத்திச் செடிகளுக்கு இடையே வைக்கப்பட்டிருந்த யூரியா கலந்த அரிசியை ஆடுகள் தின்ால் உயிரிழந்தன.

Advertisement

இதுகுறித்து பெத்தம்மாள் அளித்த புகாரின் பேரில், ரெங்கசாமி மீது அருப்புக்கோட்டை தாலுகா போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.