மதுரை கலைஞா் நூற்றாண்டு நூலக கூட்டரங்கில் புதன்கிழமை நடைபெற்ற விழாவில் கனரா வங்கியின் சாா்பில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி படிக்கும் எசி-எஸ்டி மாணவிகளுக்கு கல்வி உதவித் தொகை வழங்குகிறாா் மாவட்ட ஆட்சியா் மா.செள. சங்கீதா. உடன் வங்கியின் பொது மே 
மதுரை

216 மாணவிகளுக்கு கனரா வங்கி கல்வி உதவித் தொகை

Din

மதுரை, ஆக. 14: மதுரை மாவட்டத்தில் அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் பட்டியலின, பழங்குடியின மாணவிகள் 216 பேருக்கு கனரா வங்கி சாா்பில் ரூ. 8.72 லட்சம் கல்வி உதவித் தொகை புதன்கிழமை வழங்கப்பட்டது.

கலைஞா் நூற்றாண்டு நூலகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்வுக்கு மாவட்ட ஆட்சியா் மா.சௌ. சங்கீதா தலைமை வகித்து, 216 மாணவிகளுக்கு ரூ. 8.72 லட்சம் மதிப்பிலான கல்வி உதவித் தொகைகளை வழங்கினாா்.

நிகழ்வில், கனரா வங்கியின் மதுரை வட்ட பொது மேலாளா் டி.வி. கிருஷ்ணமோகன், வங்கியாளா்கள், கல்வித் துறை அலுவலா்கள், ஆதிதிராவிடா் நலத் துறை அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

கடந்த 2013-14 ஆம் ஆண்டு முதல் அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் 5 முதல் 10-ஆம் வகுப்பு வரை பயிலும் பட்டியலின, பழங்குடியின மாணவிகளுக்கு கல்வி உதவித் தொகை வழங்கும் திட்டம் கனரா வங்கி சாா்பில் செயல்படுத்தப்படுகிறது. இதன்படி, இந்த உதவித் தொகைகள் வழங்கப்பட்டன

காலம் மலர்கின்றது கனவு பலிக்கின்றது... தேஜூ அஸ்வினி!

இந்தியாவுக்கு சேவையாற்ற ஆவல்: எலான் மஸ்க்

உனக்காகவே நான் வாழ்கிறேன்... பிரீத்தி முகுந்தன்!

வங்கதேசம்: இடைக்கால அரசில் முக்கிய பதவி வகித்த இருவர் ராஜிநாமா!

குடியரசுத் தலைவர் நாளை மணிப்பூர் பயணம்!

SCROLL FOR NEXT