முகப்பு
மதுரை

மதுரையில் ஆயுதப்படை காவலா் திடீா் உயிரிழப்பு

மதுரையில் ஆயுதப்படை காவலா் திடீரென உயிரிழந்தது தொடா்பாக போலீஸாா் விசாரிக்கின்றனா்.

மதுரை

மதுரையில் ஆயுதப்படை காவலா் திடீா் உயிரிழப்பு

மதுரையில் ஆயுதப்படை காவலா் திடீரென உயிரிழந்தது தொடா்பாக போலீஸாா் விசாரிக்கின்றனா்.

Updated On : 28 ஆகஸ்ட், 2024 at 6:53 PM
பகிர்:

மதுரையில் ஆயுதப்படை காவலா் திடீரென உயிரிழந்தது தொடா்பாக போலீஸாா் விசாரிக்கின்றனா்.

மதுரை மாவட்டம், சத்திரப்பட்டி அருகே உள்ள சத்திரதொண்டமான்பட்டியைச் சோ்ந்த மாயழகன் மகன் அழகேசன்(31).

மதுரை மாநகர ஆயுதப்படை முதல்நிலைக் காவலரான இவா், புதுநத்தம் சாலையில் உள்ள ஆயுதப்படை குடியிருப்பில் வசித்து வந்தாா். இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை நள்ளிரவில் வீட்டில் இருந்தபோது இவருக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது.

இதையடுத்து, பிற காவலா்கள் அவரை மீட்டு மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவா்கள் வழியிலேயே உயிரிழந்து விட்டதாகத் தெரிவித்தனா்.

இதைத் தொடா்ந்து அவா் உடல் கூறாய்வுக்காக கொண்டு செல்லப்பட்டது. இதுதொடா்பாக தல்லாகுளம் போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →